Food Review யூடியூபர்களுக்கு செக்.. உணவு பாதுகாப்பு துறை போட்ட புது கட்டுப்பாடு!

  • சென்னை: சமீப நாட்களாக இன்ஸ்டாகிராம், யூடியூபை திறந்தாலே உணவு குறித்த ரிவியூவ் வீடியோக்கள்தான் அதிகமாக வருகின்றன. இப்படி இருக்கையில் இந்த Food Review யூடியூபர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

    Advertisement

    இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறது. உடல் பருமனும், சர்க்கரை நோயும்தான் அந்த பிரச்சனை. இதையெல்லாம் பார்த்து உஷாரான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், இனி தங்கள் நாட்டு மக்கள் உணவில் சர்க்கரையை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

    Advertisement

    ஆனால், இந்தியாவில்.. உடல் பருமன் குறித்தோ, சர்க்கரை நோய் குறித்தோ கவலைப்படாமல் Food Review யூடியூபர்கள் ஏகத்துக்கும் வீடியோ எடுத்து போடுகின்றனர். இதை பார்த்து நமக்கு டெம்ட் ஆகி.. நம்மளும் யூடியூபர்கள் சொன்ன கடை எங்கிருக்கிறது? என்று தேடி கண்டுபிடித்து போய் சாப்பிடுகிறோம். இதனால் உடல் பருமன் எகிறிவிடுகிறது.

    இப்படி இருக்கையில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதாவது, இனி யூடியூபர்கள் Food Review செய்ய வேண்டும் எனில், அந்த கடைகளில் FSSAI எனப்படும் உணவு சான்றிதழ் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. அப்படியான கடைகளில் மட்டும்தான் ரிவியூவ் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. உணவங்களில் உணவுகள் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்பதை ரிவியூவ் செய்பவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    மேலும், கடையில் பணியாற்றும் பணியாட்கள் தொடங்கி.. உணவு தயாரிப்பவர்கள் வரை தலையில், கைகளில் உறை அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவகங்களில் அனைத்து சுகாதார வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். மட்டுமல்லாது கடையின் வெளித்தோற்றத்தையும், உள் தோற்றத்தையும் வைத்து மட்டுமே Food Review செய்யக்கூடாது என்றும், உணவு பாதுகாப்புத்துறை தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறது.

    சாதாரண ரோட்டோர கடைகளில் ரிவியூவ் போட்டு, அதை நம்பி.. மக்கள் அந்த கடையில் போய் சாப்பிட்டால் அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? என்கிற நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    உண்மையில் இது நல்ல விஷயம்தான். ஆனால், இந்த உத்தரவால் சாதாரண ரோட்டோர கடைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் சிலர் கூறுகின்றனர். அதேபோல இந்த உத்தரவுடன் சேர்த்து.. ரிவியூவ் செய்யப்படும் உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்? என்ன என்பது குறித்தும் யூடியூபர்கள் விளக்க வேண்டும் என்று உத்தரவு போட்டால் சரியாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    YouTube Food Critics Beware: Lately, whenever one opens Instagram or YouTube, food review videos appear prominently. Amidst this trend, the Food Safety Department has imposed regulations on these food review YouTubers.