ஐடி நிறுவனங்களில் உள்ள மிக பெரிய பிரச்சினை.. ஊழியர்கள் விஷயத்தில் ஸ்ரீதர் வேம்பு தந்த எச்சரிக்கை

  • சென்னை: இந்தியாவின் முக்கிய ஐடி துறை தொழில்முனைவோரில் ஒருவர் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. ஐடி துறையில் மாறி வரும் டிரெண்ட், சவால்கள் குறித்து அவர் தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் கருத்துகளை கூறி வருகிறார். அதன்படி இப்போது ஐடி நிறுவனங்களில் உள்ள ஒர்க் கல்சர் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    நமது நாட்டில் பணி சூழல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகிறது. ஒரு நிறுவனத்தின் ஒர்க் கல்சரை பொறுத்தே அதன் செயல்பாடு இருக்கும் என்பதால் அதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இதற்கிடையே ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இது தொடர்பாக சில கருத்துகளை கூறியிருக்கிறார்.

    Advertisement

    ஒர்க் கல்சர்

    அதாவது ஒர்க் கல்சரை உருவாக்குவதற்கு ஒழுக்கம் முக்கியம் என்று பொதுவாக கருதப்படும் நிலையில், ஊழியர்களை வெறுமனே கண்டிப்பான விதிகளை பின்பற்ற வைப்பது வேறு பிரச்சினையை உருவாக்கலாம் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். நிறுவனங்கள் செயல்படும் இரண்டு விதமான அணுகுமுறைகளை அவர் விளக்கியுள்ளார். ஊழியர்கள் மேலதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருந்து, தெளிவாக நிர்ணயிக்கப்பட்ட டார்கெட்டை அடைய முயல்வது முதலாம் வகை! ஊழியர்களே முன்வந்து முடிவுகளை எடுப்பதுடன், ஒருவரின் முடிவை மற்றொருவர் கேள்வி எழுப்பும் சூழலை உருவாக்குவது இரண்டாவது வகை!

    இரு வகை

    ஒவ்வொரு ஊழியரும் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை துல்லியமாக கண்காணிப்பதில் அதிக கவனம் செலுத்தும் நிறுவனங்களில், ஊழியர்கள் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கும் நிலை உருவாகலாம். இதனால் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகள் கணிக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால், மேலிடம் எடுக்கப்படும் முடிவு தவறாக இருந்தால், அதனால் ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் ஆபத்து உருவாகும்.

    Advertisement

    மறுபுறம், ஊழியர்கள் தாங்களாகவே முடிவெடுத்து செயல்படும் பணிச்சூழலில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சக ஊழியர்களின் முடிவுகளை தொடர்ந்து கேள்வி கேட்கும் நிலையும் உருவாகலாம். இது பணிச்சூழலை குழப்பமானதாக மாற்றுவதுடன், தங்கள் செய்யும் வேலை போதுமானதாக இல்லை என்ற உணர்வையும் ஊழியர்களுக்கு ஏற்படுத்தலாம்.

    பிரச்சினை

    இதற்கு புரோகிராமர்களை உதாரணமாக கூறிய ஸ்ரீதர் வேம்பு, "ஒவ்வொரு புரோகிராமரும் மற்றொரு புரோகிராமரின் கோட்டை பார்த்து, "இது சரியாக இல்லை.. என்னால் இதைவிட சிறப்பாக செய்ய முடியும்' என்று நினைப்பார். இந்த இரண்டிலுமே நல்லதும் இருக்கிறது.. சிக்கலும் இருக்கிறது. இதனால் நிறுவனங்களுக்கு ஒரு சமநிலையை தேர்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    ஊழியர்களுக்கு முழுமையாக வழிகாட்டுதலை வழங்கினால் அவர்கள் தாங்களே புதிய விஷயங்களை முயற்சி செய்வது குறையலாம். அதே நேரத்தில் ஊழியர்களை அதிகமாக சுயமாக செயல்பட ஊக்குவித்தால் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து, குழப்பமான நிச்சயமற்ற சூழலை அது உருவாக்கும். இப்படி இரண்டிலுமே பிரச்சினைகள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

    ஸ்ரீதர் வேம்பு

    இதற்கிடையே ஜோஹோ நிறுவனமும் அதிகரித்து வரும் தொழில்நுட்ப செலவுகளால் மிக பெரிய சவாலை எதிர்கொண்டு வருவதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.. ஏஐ டேட்டா சென்டர்களின் தேவையால் மெமரி சிப் விலை அதிகரித்துள்ளது. இது ஒரு பக்கம் ஏஐ நிறுவனங்களை பாதிக்கும் நிலையில், ஏஐ டோக்கன்கள் செலவுகளும் உயர்ந்துள்ளதாக அவர் கூறினார். இப்படி செலவுகள் அதிகரித்தாலும் கூட தங்கள் வருமானத்தை அதிகரிப்பது சிக்கலாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஸ்ரீதர் வேம்பு மெமரி சிப்கள் தொடர்பாக கூறுவது 100% உண்மை. சில டிடிஆர்5 மெமரி கிட்களின் சராசரி விலை 2025 ஆகஸ்டில் சுமார் 90 டாலராக இருந்த நிலையில், 2026 ஆகஸ்டில் 425 டாலராக உயர்ந்துள்ளன. 128GB DDR5-6400 கிட்களின் முன்பு 329 டாலராக இருந்த நிலையில் தற்போது 3,399 டாலராக உயர்ந்துள்ளது. இந்தளவுக்கு விலை உயர்ந்துள்ளதும் ஐடி துறையை பாதிப்பதாக அவர் குறிப்பிடுகிறார். எனவே, குறைந்த மெமரியில் செயல்படும் புரோகிராம்களை உருவாக்குவதும் எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    English Summary

    Zoho founder Sridhar Vembu has explained how companies can balance discipline and employee autonomy(ஐடி ஒர்க் கல்சர் குறித்து ஜோஹோ நிறுவனர் சொன்ன கருத்து): Zoho Founder Sridhar Vembu latest news in tamil.