கோவை: கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 7000 தெருக்கள் உள்ளன..இந்த 100 வார்டுகள் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்கள் மூலமாகவே அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுகின்றன. கோவை மாநகராட்சி பகுதியில் நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதையடுத்து இதைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சூழலில் கடந்த ஒரே மாதத்தில் 1,600 தெருநாய்களுக்கு கருத்தடை செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரமாக கோவைவளர்ந்து வருகிறது. கோவையை பொறுத்தவரை பாம்பு செட், மோட்டார், வாகன உதிரிபாகங்கள் மற்றும் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வகையான தொழிற்சாலைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இங்கு மக்கள் தொகை வளருவதற்கு ஏற்ப நாய்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.
எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து மாநகரில் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபடுள்ளது. இதில் கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரம் தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு கூடுதல் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.. அதில் நாள்தோறும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது அதிகரிக்கப்பட்டது. இதனால் கடந்த மாதம் மட்டும் கோவை மாநகராட்சியில் 1,600 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கோவை மாநகராட்சியில் ஆரம்பத்தில் உக்கடம், சீரநாயக்கன்பாளையம், ஒண்டிப்புதூர் ஆகிய இடங்களில் மட்டுமே கருத்தடை மையங்கள் செயல்பட்டன. இதனை தொடர்ந்து வெள்ளலூர் குப்பை கிடங்கில் கைவிடப்பட்ட நாய்களுக்கான மையம் அமைக்கப்பட்டது. அங்கேயும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.. இதுதவிர வெள்ளக்கிணறு பகுதியிலும் தெருநாய் கருத்தடை மையம் கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்டது. தற்போது கோவை மாநகராட்சியில் 5 இடங்களில் கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் அந்தந்த மண்டலத்தில் பிடிக்கப்படும் தெருநாய்கள் இந்த கருத்தடை மையத்திற்கு கொண்டு வரப்பட்டு கருத்தடை செய்கிறோம். இதன்படி கடந்த மாதம் மட்டும் 1,600 தெருநாய்களுக்கு கருத்தடை செய்து உள்ளோம். இதுவரை மாநகராட்சியில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள்..ஸ்டாலின் சொன்ன வாக்குகள் கணக்கு.. என்ன லாஜிக் இது! ப்ளூ சட்டை மாறன் கேள்வி
'யோவ் மிலிட்டரி , உன் சர்வீஷ்ல இன்னைக்குத்தான்யா நீ ஒழுங்கா பேசி இருக்க' கமலை கொண்டாடும் பாஜகவினர்