விஜய் சொன்ன மாற்றம் இதுதானா? 10 நாட்களில் 3 கொடூர கொலை! 'கொலை'யம்பத்தூராக மாறிய கோயம்புத்தூர்!

  • கோயம்புத்தூர்: நேற்று கோயம்புத்தூரில் 19 வயது தனியார் கல்லூரி மாணவன் அமுதன், சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அடித்துக்கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 10 நாட்களில் கோயம்புத்தூரில் நடக்கும் 3 கொலை இது. தவெக அரசு பொறுப்பேற்று 3 மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கை இன்னுமா கட்டுப்படுத்த முடியவில்லை? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கோயம்புத்தூரில் கடந்த 3 நாட்களாக நடக்கும் சம்பவங்கள், மொத்த தமிழ்நாட்டிலும் சட்டம் ஒழுங்கு என்ன நிலைமையில் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

    Advertisement

    முதல் சம்பவம்

    ஆக.3ம் தேதி முதல் சம்பவம் நடந்தது. சென்னையை சேர்ந்த நவீன் என்கிற இளைஞர் கோவையில் நண்பர்களுடன் ரூம் எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்திருந்தார். படிப்பு முடிந்த நிலையில், வேலை தேடியிருக்கிறார். எல்லாம் ஓகேவாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இப்படி இருக்கையில் கடந்த ஆக.3ம் தேதி நவீன் தங்கியிருந்த அறையில் இருந்தவர்களுக்கும், உள்ளூர் இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    உள்ளூர் இளைஞர்கள்

    ஆரம்பத்தில் என்னவோ இரு தரப்பினரும் வாய் வார்த்தையாகத்தான் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இந்த சலசலப்பு மோதலாக வெடித்தது. உள்ளூர் கும்பல் இரும்பு ராடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நவீனை தாக்கியிருக்கின்றனர். தப்பிக்க முயன்றபோதும், துரத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். இதில் சம்பவ இடத்திலேயே நவீன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்திருந்த கோவை போலீசார், தனிப்படைகள் அமைத்து கொலையில் தொடர்புடையதாக 9 பேரை கைது செய்திருக்கின்றனர்.

    Advertisement

    இரண்டாவது சம்பவம்

    இது நடந்து 3வது நாளில் கிணத்துக்கடவில் மற்றொரு சம்பவம் நடந்தது. சோழவம்பாளையும் காமராஜ் காலணியை சேர்ந்தவர் 22 வயது இளைஞர் அஸ்வின். இவர் கட்டிட வேலையை செய்து வருகிறார். இவருக்கு மாதேஷ் (22) உடன் பழக்கம் இருந்திருக்கிறது.

    ஆனால் எல்லா பழக்க வழக்கமும் ஒரு நாள் பஞ்சாயத்தில்தான் போய் முடியும் என்பதை அஸ்வின் உணர்ந்திருக்கவில்லை. ஆக.6ம் தேதிதான் அந்த பஞ்சாயத்து நாள். மது மற்றும் போதைப்போருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று மதேஷை அஸ்வின் பலமுறை எச்சரித்திருக்கிறார். எனவே இருவருக்கும் இதற்கு முன்னர் வாய் தகராறு வெடித்திருக்கிறது. இதை மாதேஷ் மறக்காமல் மனதில் வைத்துக்கொண்டு, நேரம் பார்த்து பழிவாங்க காத்திருந்திருக்கிறார்.

    Advertisement

    இன்ஸ்டா வீடியோ

    ஆக.6ம் தேதி அஸ்வின் சிக்கலாம்பாளையத்தில் உள்ள அவரது நண்பர் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விடியற்காலை 6 மணியளவில் மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவன் இருவரும் வீடு புகுந்து அஸ்வினை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். இதில் அஸ்வின் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத மாதேஷும், 16 வயது சிறுவனும் அஸ்வினின் சடலத்தை தாக்கி அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்திருக்கின்றனர். இதையடுத்து இருவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    3வது சம்பவம்

    இது நடந்து 4வது நாளில்.. அதாவது ஆக.10ம் தேதியன்று ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் 3வது சம்பவம் நடந்திருக்கிறது. 19 வயது மாணவனான அமுதன் கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்திருந்தார். இவர் கல்லூரி விடுதியின் சமையலரை தாக்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளானதால், விடுதியிலிருந்து நீக்கப்பட்டார். எனவே, ஒத்தக்கால்மண்டபம் பூங்கா நகர் பகுதியில் நண்பர்களுடன் ரூம் எடுத்து தங்கி வந்தார்.

    Advertisement

    சரமாரி தாக்குதல்

    இது ஒருபுறம் இருக்க.. மறுபுறம் ஆக.10 அன்று காலையில் இதே கல்லூரியை சேர்ந்த மாணவர் இளவரசனின் அறைக்குள் புகுந்த முகமுடி அணிந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி செல்போனை பறித்து சென்றனர். இந்த சம்பவத்தின் பின்னால் அமுதன் இருக்கலாம் என்று இளவரசன் தரப்பு சந்தேகித்திருக்கிறது. எனவே அன்று இரவு நண்பர் ஸ்ரீமனுடன் சென்றுக்கொண்டிருந்த அமுதனை வழிமறித்து, வலுக்கட்டாயமாக கல்லூரி பின்புறம் உள்ள மைதானத்திற்கு கொண்டு சென்று சரமாரியாக தாக்கியிருக்கின்றனர்.

    மாணவர்கள் கைது

    பலத்த காயங்களுடன் ரூமுக்கு திரும்பிய அமுதனுக்கு, இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது நண்பர்கள் அமுதனை அட்மிட் செய்திருக்கின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அமுதன் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் 5 மாணவர்களை கைது செய்திருக்கின்றனர்.

    Advertisement

    கோலை நகரமான கோவை

    இப்படியாக கோயம்புத்தூரில் அடுத்தடுத்து 3 நாட்கள் இடைவெளியில் 3 இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

    திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று சொல்லிதான் தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. அதிகாரத்திற்கு வந்த பின்னரும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாதது ஏன்? என்றும் மாணவர்களும், பெற்றோர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

    English Summary

    TVK Govt Faces Heat: The incident in Coimbatore yesterday, where Amudhan—a 19-year-old private college student—was beaten to death following a dispute with fellow students, has caused shock. This marks the third murder in Coimbatore within the last ten days. Various quarters are questioning why law and order has not yet been brought under control, even as the TVK government completes three months in office. This situation has created a crisis for the government led by Chief Minister Vijay.