பெங்களூர் IT வேலையை விட்டுவிட்டு கஞ்சா வியாபாரம்! கோவையில் 148 கஞ்சா சாக்லேட்டுகள்! 3 பேர் கைது!

  • கோவை: கோவை, ரத்தினபுரி அருகே கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்ததாக பெங்களூர் முன்னாள் ஐடி ஊழியர் உட்பட 3 இளைஞர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

    Advertisement

    அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 148 கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    Advertisement

    கோவை மாநகரம், ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாஸ்திரி ரோடு சுடுகாடு பகுதியில் சட்ட விரோதமாகக் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக உதவி ஆய்வாளர் கஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில், தலைமை காவலர் சாலமன் மற்றும் முதல் நிலை காவலர் பிரபு ஆகியோர் அடங்கிய தனிப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    “19 கி.மீ.. 3 மணி நேரம்!”.. பெங்களூர் டிராபிக்கில் சிக்கிய பெண்.. கடைசி 2 நிமிடத்தில் திக்திக்
    Advertisement

    அப்போது அவ்வழியாகச் சந்தேகத்திற்கு இடமான முறையில் கிரே நிற இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்து இருந்த 1 கிலோ கஞ்சா, 148 கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அபுபக்கர் சித்திக் (25), சர்புதீன் (22), முருகன் (21) என்பது தெரியவந்தது.

    பிடிபட்ட அபுபக்கர் சித்திக், முன்பு பெங்களூரில் உள்ள முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தபோது கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். பின்னர் வேலைக்குச் செல்லாமல் தனது உறவினரான சர்புதீன் மற்றும் நண்பரான முருகனுக்கும் கஞ்சா பழக்கத்தைக் கற்றுக் கொடுத்து உள்ளாராம்.

    Advertisement
    மொத்தமாக முடங்கும் பெங்களூர் - ஓசூர் நெடுஞ்சாலை.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்! அலறும் மக்கள்

    மூவரும் சேர்ந்து கடந்த வாரம் தமிழக - ஆந்திர எல்லையான சித்தூர் பகுதிக்குச் சென்று, பெயர் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து பெருமளவில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை வாங்கி வந்து உள்ளனர். அதனை கூலித் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள், வடமாநில இளைஞர்கள் அதிகம் வசிக்கும் சாஸ்திரி ரோடு பகுதியில் ரகசியமாக விற்பனை செய்து வந்தது அம்பலமானது.

    இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Advertisement

    இச்சம்பவம் குறித்து ரத்தினபுரி புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    English Summary

    3 youths were arrested as they are possessing Ganja in Coimbatore. 148 kanja chocolates and 1 kg kanja seized from them.