மகளிர் உரிமைத் தொகைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்.. கோவை மக்கள் அறிய வேண்டியவை

  • கோவை: மகளிர் உரிமைத்தொகை கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கோவையில் கலெக்டர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மட்டுமே பொதுமக்களிடம் நேரடியாக மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த சூழலில் கோவையில் கடந்த 3 மாதங்களில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என தி.மு.க. வாக்குறுதி அளித்தது. அதன்படி தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி மகளிர் பயன்பெற்று வருகிறார்கள். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயன் அடைந்தனர்.

    Advertisement

    இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்படும் என்று விஜய் தலைமையிலான த.வெ.க. வாக்குறுதி அளித்தது. இந்த சூழலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.. ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மகளிர் உரிமை தொகை 2500 ரூபாய் ஆக எப்போது உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது. இதனிடையே எப்போது வேண்டுமானாலும் அரசு அறிவிக்கும் என்ற நம்பிக்கையில், மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கும் குடும்ப தலைவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    Advertisement

    கோவை மாவட்டத்தில் கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் 5 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், மகளிர் உரிமைத்தொகை கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். தற்போது கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மட்டுமே பொதுமக்களிடம் நேரடியாக மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதற்காக தனி மேஜை போடப்பட்டு உள்ளது. இணையதளத்தில் பதிவு செய்தாலும், நேரடியாக பதிவு செய்தாலும் சென்னைக்கு தான் சம்பந்தப்பட்ட விண்ணப்பம் செல்லும். பின்னர் அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யக்கோரி சென்னையில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்டம் மற்றும் வருவாய் கோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்கள்.

    Advertisement

    மகளிர் உரிமை தொகை 2500 ஆக எப்போது உயர்த்தப்படும். மகளிர் உரிமை தொகை உயர்வு என்பது இப்போதைக்கு அரசு சாத்தியமில்லை என்பது நிதி நிலைமை மற்றும் அமைச்சர்களின் பதில்களை பார்க்கும் போது தெரிகிறது.நிதியமைச்சர் மரியா வில்சன் பட்ஜெட் தாக்கலின் போது பேசுகையில், மாநிலத்தின் நிதிநிலை, நிலையில்லாமல் உள்ளது.

    கடன் சுமையால் நிரம்பியும், குறைந்தபட்ச வருவாயுடனும், கசியும் ஓட்டைகளுடனும் கூடிய கருவூலப்பெட்டி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப்பணி தொடங்கப்பட்டு விட்டது. எனினும், நிதி நிர்வாகத்தை மீண்டும் நிதி ஒருங்கிணைப்பு பாதைக்கு கொண்டுவர குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும் என்றார். அந்த வகையில் 2028 ம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளதாகவே சொல்கிறார்கள்.

    English Summary

    Applications for the magalir urimai thogai can be submitted online through the Chief Minister's Special Cell. In Coimbatore, however, applications are accepted directly from the public only during the weekly grievance redressal meeting held on Mondays at the Collector's office.