கோவை சூலூரில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி சடலமாக மீட்பு! உறவினர்கள் போராட்டம்

  • கோயமுத்தூர்: கோவை சூலூர் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி மாயமான நிலையில் குளக்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சூலூர் அருகே ஒரு வீட்டின் முன்பு 9 வயது சிறுமி நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அந்த சிறுமி திடீரென மாயமாகிவிட்டார். இதையடுத்து அவரது பெற்றோர், சிறுமியை அவரது உறவினர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினர்.

    Advertisement

    ஆனால் அவர் கிடைக்கவில்லை. அவரை 3 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு குளக்கரையில் சிறுமியின் சடலம் இருப்பதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் ஊரில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அந்த சிறுமியை பைக்கில் இருவர் கடத்தி சென்றதாக கிடைத்த தகவலை அடுத்து அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    English Summary

    A tragic incident near Sulur has shocked residents after a 9-year-old girl, who was playing outside her house, went missing and was later found dead near a pond area. T