கோவை, திருப்பூர், திண்டுக்கல்லுக்கு இதுவே உண்மையான விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பரிசு.. வெதர்மேன் பதிவு

  • கோவை: விநாயகர் சதுர்த்தி நாளில் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாயப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, உள் தமிழகப் பகுதிகளுக்கு இன்றே மிகச் சிறந்த மழை நாளாக அமைய வாய்ப்புள்ளது என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    "குறிப்பாக திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஒரு துளி மழை கூட பெய்யாத இடங்களில் இந்நிலை மாறும். ஆம், ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை! வெப்பம் மிகக் கடுமையாக இருந்து வந்த நிலையில், வரண்ட இந்த உள் மாவட்டப் பகுதிகளுக்கு இன்று மிகவும் தேவையான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய பலமான வாய்ப்பு உருவாகியுள்ளது. வறண்டு போயிருந்த இந்தப் பகுதிகளுக்கு இது ஒரு உண்மையான விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பரிசு!" என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.

    Advertisement

    நேற்று காலை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பதிவில், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஒரு அருமையான நாளாக அமைந்தது; இப் பகுதிகள் அனைத்தும் மிக அத்தியாவசியமான மழையைப் பெற்றன. நீண்ட கால வரலாற்றுச் சிறப்புமிக்க வெப்பத்திற்குப் பிறகு, இந்தப் பட்டையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததைப் பார்ப்பது உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது" என்று கூறியிருந்தார்

    இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தென்மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு விதர்பா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை மராத்வாடா, வடக்கு உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 1.5 கி.மீ உயரம் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

    Advertisement

    இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும் நாளை மறுதினமும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    செப்டம்பர் 16-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

    Advertisement

    செப்டம்பர் 17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu Weatherman Pradeep John has stated that there is a possibility of rain in the interior districts of Tamil Nadu—including Dindigul, Tiruppur, and Coimbatore—on Vinayagar Chaturthi. In a post, he expressed his delight, noting that after a long spell, today is likely to be an excellent day for rainfall across interior Tamil Nadu.