ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பறந்த அரசின் உத்தரவு

  • கோவை: தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் பயோமெட்ரிக் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் கோவையில் வீடு தேடி சென்று பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதியும் பணியை ரேஷன் கடை பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள் . மேலும் இறந்தவர்களின் பெயர் நீக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் தங்கள் பயோமெட்ரிக் பதிவினை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. பலரும் இன்னமும் பயமற்றில் பதிவினை ரேஷன் கடைகளில் சென்று மேற்கொள்ளாமல் உள்ளனர். இவர்களுக்காக அரசு பல்வேறு சிறப்பு முகாம்களையும் அடிக்கடி அழைப்புகளையும் விடுத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் பயோமெட்ரிக் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Advertisement

    கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 11.25 லட்சம் ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் உள்ளன. கோவை மாவட்டத்தில் 1,523 ரேஷன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பயோமெட்ரிக் வைத்துள்ள குடும்ப உறுப்பினர்கள், அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வருகிறார்கள்.

    பொதுவிநியோக திட்டம் சார்பில் ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகையும் பயோமெட்ரிக் பதிவு செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடைக்கு வரும் ரேஷன் கார்டுதாரர்களிடம் கைரேகை அல்லது கருவிழி பதிவு செய்ய வேண்டும் என ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    Advertisement

    கோவை மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டில் 95.03 சதவீதமும், முன்னுரிமை ரேஷன்கார்டு 96 சதவீதமும் மற்றும் முன்னுரிமையற்ற ரேஷன்கார்டுகள் 88 சதவீதமும் பயோமெட்ரிக் சேகரிக்கும் பணி நிறைவடைந்து உள்ளது.

    இன்னமும் கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 782 ஸ்மார்ட் கார்டுகளின் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். ஆகவே கோவை மாவட்டம் முழுவதும் அவர்களிடம் கைரேகை பதிவு பெற சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் 60 ஆயிரம் பேரிடம் கைரேகை பதிவு பெறப்பட்டு உள்ளது.

    Advertisement

    இது குறித்து கோவை மாவட்ட ரேஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், ரேஷன் கார்டுகளில் பயோமெட்ரிக் பதிவு பெறுவது தீவிரப்படுத்தப்பட்டது. கோவையில் 4 லட்சம் பேரிடம் பயோமெட்ரிக் பதிவு பெறப்படாமல் இருந்தது. எனவே கோவை மாவட்டம் முழுவதும் அவர்களின் வீடு தேடி சென்று கைரேகை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 60 ஆயிரம் பேரிடம் கைரேகை பதிவு பெறப்பட்டு உள்ளது. மீதி 3 லட்சத்து 40 ஆயிரம் பேரிடம் கைரேகை பதிவு பெற்று வருகிறோம்.

    அதே நேரத்தில் இறந்த குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாக உரிய ஆவணங்கள் பெற்று பெயர் நீக்கம் செய்யும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கைரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்குவது குறித்து அரசு எதுவும் அறிவிக்கவில்லை. வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் ரேஷன்கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன்கடைகளுக்கு சென்று பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

    English Summary

    Coimbatore: A sweeping order from the government applies to all family members listed on the ration card.