விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட்

  • கோவை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த 3 வாரங்களிலேயே அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அமைச்சர்கள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். கோவையில் ஆய்வு செய்த ஆதவ் அர்ஜுனா, விளையாட்டு துறையை மேம்படுத்த வைத்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கினார். இதுகுறித்து விஜய் விரைவில் ஒரு திட்டத்தை அறிவிக்கவுள்ளாராம்.

    Advertisement

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் தமிழ்நாட்டில் நடக்கின்றன. 18,000 பேர் கடந்த வருடம் சாலை விபத்தால் உயிரிழந்துள்ளனர். கொரோனா காலத்தில் கூட இவ்வளவு மக்கள் உயிரிழக்கவில்லை. இது இந்தியாவிலேயே மிகப்பெரிய இறப்பு சதவீதம். இதை எப்படி குறைக்க போகிறோம் என்பதைப் பற்றி ஆய்வு செய்துள்ளோம்.

    Advertisement

    சாலை விபத்துகளை குறைக்க

    மேம்பாலம் கட்டுகிறோம், மாநில நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுகிறோம். 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றுகிறோம். விபத்துகள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் வேகம். பலரும் 150 கி.மீ வேகத்தில் பயணிக்கிறார்கள். யூடர்ன் எடுக்கும் இடங்களில் சிக்னல்கள் இல்லை. நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஊராட்சி, கிராமங்களை இணைப்பதற்கு பாதுகாப்பான சாலைகள் இல்லை.

    இதுவரை எந்த அரசும் உள்கட்டமைப்புக்கு செலவு செய்துள்ளார்களே தவிர, பாதுகாப்புக்காக செலவு செய்யவில்லை. சாலைகளுக்கு எவ்வளவு அதிகமாக பட்ஜெட் ஒதுக்குகிறோமோ நல்லது. விபத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, உயிரிழப்பை முழுவதுமாக குறைப்பதற்காக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு இருக்கும். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கும் எடுத்து சென்றுள்ளோம்.

    Advertisement

    விளையாட்டு மேம்படுத்த

    கேரளா அரசு போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். அதனால் கேரளா எல்லைக்குள் நுழைந்தவுடன் அங்கு விதிகளை பின்பற்றுகிறார்கள். தமிழகத்திற்குள் வரும்போது விதிகளை காற்றில் பறக்கவிடுகிறார்கள். இளைஞர்களிடம் போதை பழக்கம் அதிகமாக உள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளன. பள்ளி பருவத்தில் இருந்தே போதை பழக்கம் தொடங்கிவிடுகிறது.

    அதை சரி செய்ய விளையாட்டு துறைகளில் அதிக கவனம் செலுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். எல்லா மைதானங்களையும் மேம்படுத்தி, காலை மற்றும் மாலை விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவுள்ளோம். பள்ளி கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து மைதானங்களை மேம்படுத்துவோம். எங்கு மைதானம் உள்ளது, எங்கு பயிற்சி எடுக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் மக்களுக்கு தெரிவதில்லை.

    Advertisement

    மைதானங்கள்

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கோவை நேரு ஸ்டேடியம் மேம்படுத்த வேண்டியுள்ளது. ஒரு ஒலிம்பிக் தரத்தில் கோவை மாவட்டத்திற்கு தேவையான வசதிகளை செய்வதற்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை நேரு ஸ்டேடியம் போல, கோவை நேரு ஸ்டேடியம் மேம்படும். சென்னை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, நாகப்பட்டினம், மதுரை பகுதிகளில் விளையாட்டு துறையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவோம்" என்றார்.

    English Summary

    Aadhav Arjuna: Minister Aadhav Arjuna said, CM Vijay to focus on Sports and Highway to reduce the accidents. Soon in Budget important scheme will be announce.