மோடி விஜய் அமித்ஷா.. எஸ்பி வேலுமணி அடுத்த கேம் பிளான்.. எடப்பாடி எதிர்பாராத டிவிஸ்ட்

  • கோவை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளையும் வைத்திருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக இண்டாம் இடத்தை பிடித்தது. அதிமுகவின் தோல்வி பேசு பொருளாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி அரசியல் ஆட்டத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மெட்ரோ விவகாரத்தில் தவெக மற்றும் விஜயை எடப்பாடி பழனிசாமி கண்டித்திருந்தார். ஆனால் எஸ்பி வேலுமணி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதலமைச்சர் விஜயை குறிப்பிட்டு பேசியிருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்பி வேலுமணி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை; புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்த வரலாற்றுச் சாதனைத் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த பிரதமர் அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி! கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்!

    Advertisement

    வார்தைக்கு வார்த்தை நன்றி

    சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பை உருவாக்க, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டு, ஆலந்தூர், கோயம்பேடு இடையேயான முதல் மெட்ரோ ரயில் சேவையை, 2015ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதியன்று அவரே தொடங்கிவைத்தார். தொடர்ந்து கழக ஆட்சியில் மெட்ரோ ரயில் முதல் கட்டத்தின் (Phase-1) உயர்மட்ட மற்றும் சுரங்க வழித்தடப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.

    தற்பொழுது விரிவுபடுத்தப்பட்டு வரும் ரூ. 63,246 கோடி மதிப்பிலான 118.9 கி.மீ. நீள சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம்(Phase-2), கழக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து நிதி ஒப்பந்தங்கள் பெறப்பட்டு, 2020ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின்கீழ் வழித்தடம் 4-இல் அமைந்துள்ள பூந்தமல்லி புறவழிச்சாலை - வடபழனி இடையிலான 14.64 கி.மீ. தூர புதிய மெட்ரோ ரயில் சேவையை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களும் திறந்து வைத்துள்ளனர்.

    Advertisement

    கோவை மதுரை மெட்ரோ

    இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்திருப்பதன் வாயிலாக, போரூர், ஐய்யப்பந்தாங்கள், பூந்தமல்லி மற்றும் புறநகர் பகுதி மக்களின் நீண்டநாள் போக்குவரத்துச் சுமை கணிசமாகக் குறையும். மேலும், பல்வேறு திட்டங்களையும், கோவையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் துடியலூர், சூலூர் மற்றும் காரமடை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3 புதிய ரயில்வே மேம்பாலங்களையும் திறந்து வைத்துள்ளனர். இதற்காக பிரதமர் அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வரலாற்றுப் பெருமைமிக்க சென்னை மெட்ரோ ரயில் திட்டம் #அஇஅதிமுக அரசின் சாதனை மைல்கல் திட்டமாகும். தலைநகர் சென்னைக்கு இணையாகத் தொழில் வளத்தைக்கொண்டு, மக்கள் தொகைப் பெருக்கத்தைச் சந்தித்து வரும் தமிழ்நாட்டின் முக்கியப் பெருநகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
    கழக ஆட்சியின் போதே இவ்விரு மாநகரங்களுக்கும் மெட்ரோ ரயில் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டன.

    Advertisement

    எடப்பாடி ஷாக்

    ஆனால் பின்னர் வந்த திமுக ஆட்சியில் சரியான நிர்வாகம் இல்லாததால் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட செயல்பாடுகள் கிடப்பில் போடப்பட்டு, தற்போது வெறும் காகித அளவிலேயே கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. இனிமேலும் தாமதிக்காமல் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும், நிதி ஒதுக்கீடுகளையும் துரிதப்படுத்தி, பணிகளை உடனடியாகத் தொடங்கி, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

    பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ இடையே எடப்பாடி பழனிசாமி தவெகவை கண்டித்திருந்தார். விஜய் போட்டோசூட் நடத்துகிறார் என்று காட்டமாக விமர்சித்திருந்தார். நேற்று மதியம் எடப்பாடி விஜயை கண்டித்த நிலையில், நேற்று இரவு வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில் விஜயின் எக்ஸ் பக்கத்தை டேக் செய்து பாராட்டியுள்ளார். இதன் மூலம் தனது அடுத்தகட்ட அரசியல் ஆட்டம் தொடங்கியுள்ளதை வேலுமணி சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

    English Summary

    ADMK Former Minister SP Velumani Praised CM Vijay along with PM Narendra Modi and Central Home Minister Amitshah gave shock to Edappadi Palanisamy.