“தவெக தடுமாறும் போது.. தூக்கி பிடித்து உதவ வேண்டும்!” சேம் சைடு கோல் அடித்த அண்ணாமலை!

  • கோயம்புத்தூர்: விஜய்க்கு எதிராக புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியிருக்கும் அண்ணாமலை, தவெகவை எதிர்ப்பதற்கு பதிலாக, தவெகவுக்கு ஆதரவாக பேசியிருப்பது விவதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெளியேறினார். இதையடுத்துதான் தன்னுடைய 'வீ த லீடர்ஸ்' அமைப்பை பலப்படுத்த தொடங்கினார்.

    Advertisement

    தவெகவை விமர்சிக்காதது ஏன்?

    இன்று பொள்ளாச்சியில் இந்த அமைப்பின் முதல் மாநாட்டை அண்ணாமலை நடத்தியிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது, "இந்த அமைப்பு மூலமாக தவெக அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது. தற்போது இருப்பவர்களில் நிறையபேர் புது எம்எல்ஏக்கள். செங்கோட்டையனை தவிர மற்ற அனைவரும் புதிய அமைச்சர்கள். அவர்கள் தடுமாறத்தான் செய்வார்கள். எனவே, நல்ல சமூகமாக இருந்தால் நாம் அவர்களை தூக்கி பிடித்துதான் விட வேண்டுமே தவிர கீழே அழுத்த கூடாது.

    கை கொடுக்க வேண்டும்

    இந்த அமைப்பு ஆரோக்கியமான அரசியல் மூலம் சொல்ல வேண்டும். கேட்கவில்லை எனில் அப்புறம் என்ன நடக்குது என்பது வேறு. நமக்கு அதிகார வெறி இல்லை. தவெக தடுமாறும் போது.. தூக்கி பிடித்து உதவ வேண்டும். நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம்" என்று பேசியிருந்தார். அவர் இப்படி பேசும்போது கூட்டத்தில் விசில் பறந்தது.

    Advertisement

    அண்ணாமலை, இந்த இயக்கத்தை தொடங்கியபோது, முதல்வர் விஜய்க்கு எதிரான சக்தியாக புதிய அரசியல் கட்சியை உருவாக்க போகிறார் என்றுதான் பேசப்பட்டது. அப்படி இருக்கையில், விஜய்யை ஆதரிப்பதாக அவர் பேசியிருப்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.

    தொடர்ந்து பேசிய அவர், "எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இந்த ஆண்டு தவெக அரசு ரூ.80,000 கோடிக்கும் அதிகமாகத்தான் கடன் வாங்கப்போகிறது. அடுத்த ஆண்டும் இதே நிலைமைதான். இப்படியாக தவெக ஆட்சி முடியும்போது தமிழகத்தின் கடன் ரூ.14-15 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கும்.

    பழிவாங்கிய திமுக

    திமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் நான் பேச அழைக்கப்பட்டேன். நான் பேசிய பின்னர் ஒரு வாரத்திற்கு அந்த கல்லூரியில் பவர் கட். நான் பேச சென்றதால் திமுக பழிவாங்கியது. ஆணவத்தோடு அரசியல் செய்தால்.. இந்த மண் அவர்களை விடாது என்பது 2026 தேர்தல் சாட்சி. நம்முடைய அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுக்கும். அதில் எந்த மாற்றுக்கட்சியும் இல்லை. 2031ல் நாம் மக்கள் முன்பு நிற்க போகிறோம்.

    Advertisement

    பாஜகவின் பி டீம்?

    நான் இந்துதான். ஆனால், நான் வீட்டை விட்டு வெளியே வரும்போது என்னுடைய மதத்தையும், சாதியையும் வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வருகிறேன். நான் எந்த மதத்தையும் தூக்கி பிடிக்க வேண்டியதில்லை. நான் பாஜகவின் தலைவர்வகளை மோடியை திட்டவில்லை என்பதால்.. நான் பாஜகவின் பி டீம் என்று திமுகவினர் விமர்சிக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

    English Summary

    Annamalai, who has launched a new political movement to counter Vijay, has sparked debate by speaking in support of TVK instead of opposing it.