கடைசி நேரத்தில் அடித்து ஆடிய அண்ணாமலை! விஜய்க்கு நேரடி போட்டி! பாஜகவே எதிர்பார்க்கல!


  • கோயம்புத்தூர்: அண்ணாமலையின் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு இன்று கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டு வந்திருக்கின்றனர். பாஜகவில் அண்ணாமலை இருந்தபோது அவர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை விட.. இந்த மாநாட்டுக்கு மக்களின் ஆதரவு எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. இதற்கு அவரது நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    அதாவது கோயில் நிலங்கள் மற்றும் இனாம் நிலங்கள் குறித்த அரசாணையை சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்குதான் ட்விஸ்ட் வைத்து ஆட்டத்தை தொடங்கினார் அண்ணாமலை. அரசாணைக்கு அவர் 100% ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த மாற்றம் அண்ணாமலையின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

    Advertisement

    அரசாணை சொல்வது என்ன?

    கரூர் மாவட்டத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோயில், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் சுவாமி கோயில் மற்றும் வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோயில் என.. 4 கோயில்களுடன் தொடர்புடைய 3084 ஏக்கர் நிலம், 3390 பட்டாதாரர்களுக்கு பயன்பட்டு வந்தது.

    ஆனால், கடந்த 1963ம் ஆண்டு போடப்பட்ட சட்டத்தின் மூலம், நிர்வாக தவறுதலாக இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாதவையாக மாற்றப்பட்டன. இதனால், பொதுமக்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது தவெக அரசின் அரசாணை மூலம் இந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    பாஜக கடும் எதிர்ப்பு

    தவெக அரசின் அரசாணைக்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "அரசியல் ஆதாயங்களுக்காக கோவில் நிலங்கள் பயன்படுத்தப்படக் கூடாது. கரூர் மாவட்டத்தில் உள்ள ₹25,000 கோடி மதிப்புள்ள 3,085 ஏக்கர் கோயில் நிலங்கள் விஷயத்தில் தவெக அரசு தனது அரசியல் லாபத்திற்காக போதிய ஆய்வுகளும் வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோமென செயல்படுகிறது" என்று விமர்சித்திருந்தார்.

    கோயில் நிலங்களும் மக்களும்

    கோயில் நிலங்களை பல தலைமுறைகளாக விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஒன்னுமே இல்லாமல் தரிசாக கிடந்த நிலங்களை.. பொன் விளையும் பூமியாக தங்கள் உழைப்பால் மாற்றியிருக்கின்றனர். ஆனால், இன்று வரை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த கோயில் நிலங்களை உரிமை கொண்டாட முடியாதவர்களாக இந்த மக்கள் இருக்கின்றனர். மட்டுமல்லாது எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் இவர்கள் வெளியேற்றப்படலாம் என்கிற அச்சமும் இருக்கிறது.

    Advertisement

    உழைப்பவர்களுக்கே நிலம் சொந்தம்

    எனவே உழைப்பவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதன் அடிப்படையில் காலம் காலமாக, கோயில் நிலத்தில் வசிக்கும் எளிய மக்களுக்கு அந்த நிலத்தை உரிமை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்பது பல ஆண்டுக்கால கோரிக்கை. ஆனால், எந்த அரசாங்கமும் இதை நிறைவேற்றவில்லை.

    இப்படி இருக்கையில், தற்போது கரூர் கோயில் நிலம் தொடர்பான அரசாணைக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்திருந்தார். இதுதான் பாஜகவிலிருந்து அவரை வேறுபடுத்தி காட்டியிருந்தது.

    பாஜகவின் எதிர்ப்பும் அண்ணாமலைக்கான ஆதரவும்

    குறிப்பாக, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் அண்ணாமலையின் நிலைபாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இருப்பினும் அண்ணாமலையின் நிலைப்பாட்டுக்கு, கரூர் மக்களின் ஆதரவை அதிகரிக்க செய்திருக்கிறது. இது இன்றைய மாநாட்டிலும் எதிரொலித்திருக்கிறது.

    Advertisement

    இந்த ஆதரவு விஜயக்கு எதிரானதாக மாறுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. கரூர் மாநாட்டு கூட்டத்தை பார்க்கும்போது, சீக்கிரமாகவே முதல்வர் விஜய்க்கு எதிராக அண்ணாமலை உருவாகிவிடுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    English Summary

    Annamalai: The inaugural conference of Annamalai's 'We the Leaders' organization is taking place in Coimbatore today. A vast number of people from various regions have gathered for the event. Public support for this conference has surged dramatically compared to the gatherings held under his leadership during his time with the BJP. This shift is attributed to the change in his stance.