Gen Z + 2031.. அண்ணாமலை போடும் பிளான் இதுதான்.. போதை ஒழிப்பு மாநாட்டில் கவனிச்சீங்களா

  • கோவை: "போதையில்லா தமிழகம்" என்ற இலக்கை நோக்கி அண்ணாமலை கோவையில் மிக பெரிய மாநாட்டை நடத்தியுள்ளார். அந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை, Gen Z இளைஞர்கள் ஆதரவு தங்களுக்கு அதிகம் இருப்பதாக தெரிவித்தார். மேலும், 2031ல் மிக பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

    Advertisement

    பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை புதிதாக 'வீ த லீடர்ஸ்' (we the leaders) என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பின் முதல் மாநாடு இன்று கோவை பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து மிக பெரிய மக்கள் திரண்டுள்ளனர்.

    Advertisement

    குறிப்பாக Gen Z எனப்படும் இளைஞர்களை குறிவைத்தே இந்த மாநாடு இருந்தது. மாநாட்டில் அதிகளவில் Gen Z இளைஞர்களை பார்க்க முடிந்தது. மேலும், மேடையிலும் பல Gen Z இளைஞர்கள் ஏற்றப்பட்டனர். அண்ணாமலை அந்த மேடையில் பேசும்போது கூட Gen Z இளைஞர்களை குறிவைத்தே பேசினார். வீ தி லீடர்ஸ் இளைஞர்களை கொண்ட அமைப்பு என்ற அண்ணாமலை, 2031ல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்

    இந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை, "Gen Z இளைஞர்களிடம் பேசவே முடியாது. அவர்கள் நினைத்ததை செய்வார்கள் என சொல்கிறார்கள். ஆனால், அப்படி இல்லை. இந்த மேடையில் இருக்கும் அனைவரும் Gen Z தான். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சகோதரியும் Gen Z தான்.

    Advertisement

    வீ தி லீடர்ஸ் அமைப்பில் 19 லட்சம் பேர் இருக்கிறார்கள். அதில் 18 வயதில் இருந்து 25 வயது வரை இருப்போர் 14% பேர். 26 வயதில் இருந்து 39 வயது வரை இருப்போர் 40% பேர். இந்த வீ தி லீடர்ஸ் இளைஞர்களை கொண்ட இயக்கம். 39 வயதுக்கு கீழானவர்கள் 53% பேரை கொண்ட இயக்கம். அவர்கள் வாய்ஸ்ஸை நாம் கேட்க வேண்டும். அவர்கள் யோசிப்பது வித்தியாசமாக இருக்கும். சமூகத்தை வித்தியாசமாக பார்க்கிறார்கள். மாற்றம் வேகமாக வேண்டும் என நினைக்கிறார்கள்.

    இந்த 39 வயதிற்கு கீழ் இருப்போர் தான் 2026ல் மிக பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். 2031ல் அவர்கள் மீண்டும் ஒரு பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தான் போகிறார்கள். அதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் தேவையில்லை" என்றார்.

    English Summary

    We The Leaders Maanadu in Coimbatore, Annamalai said Gen Z and young voters are driving political change in Tamil Nadu(2031 தேர்தலை குறிவைத்து பேசிய அண்ணாமலை): Annamalai Targets Gen Z in his Coimbatore meeting.