கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான்

  • கோவை: சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா செய்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குள்ளாக அவர் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து புதிய கட்சியை தொடங்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக அவர் கொங்கு மண்டலத்தில் உள்ள திமுக, அதிமுகவின் புறக்கணிக்கப்பட்ட சீனியர்களை தங்கள் பக்கம் இணைப்பதற்கு அண்ணாமலை வலை வீசி வருகிறாராம்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் களம் அப்படியே மாறியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாகிவிட்டது. தமிழகத்தை அதிகமுறை ஆண்ட அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியே புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். விரைவில் அரசியல் கட்சியையும் அவர் ஆரம்பிக்கவுள்ளார். இயக்கம் தொடங்கிய 5 நாட்களில் சுமார் 17 லட்சம் பேர் அதில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    கட்சி கட்டமைப்பில் கவனம்

    இவற்றில் பெரும்பாலும் பாஜகவில் இருந்த அண்ணாமலையின் ஆதரவாளர்கள், வலதுசாரி சிந்தனையாளர்கள் தான் அதிகம் உள்ளனர். கொங்கு மண்டலத்தில் மட்டும் கணிசமான இளைஞர்கள், முக்கியமாக கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த நடுத்தர வயதினர் அண்ணாமலை இயக்கத்தில் அதிகம் இணைந்துள்ளனர். இவர்கள் களப்பணியாளர்கள் கிடையாது. தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுடன் போட்டி போட களத்தில் இந்த பலம் போதாது.

    தவெகவுக்கே கட்சி கட்டமைப்பு இல்லை என்பதால் தான் அதிமுக, திமுகவில் இருந்து பழைய நிர்வாகிகளை இணைத்து வருகிறார்கள். இதனால் அண்ணாமலையும் அதே ரூட்டை எடுத்துள்ளார். கொங்கு மண்டலத்தில் அதிமுக, பாஜகவின் செல்வாக்கு கணிசமாக சரிந்துள்ளது. அண்ணாமலைக்கு ஏற்கனவே கொங்கு பகுதியில் ஆதரவு உள்ளது. கட்சிக்கான அஸ்திவாரத்தை கொங்கு பகுதியில் ஆழமாக ஊன்ற நினைக்கிறார்.

    Advertisement

    வலை வீசும் அண்ணாமலை

    இதனால் கொங்கு மண்டலத்தில் அதிமுக மற்றும் திமுகவில் புறக்கணிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை எடுத்து வருகிறார். இதற்கான ஒரு அணியை உருவாக்கியுள்ளார். அவர்கள் மாற்றுக் கட்சிகளின் பட்டியலை எடுத்து வருகிறார்கள். அவர்கள் எப்போது கட்சியில் இணைந்தார்கள். என்ன பதவி கொடுத்தனர், எந்த பதவியெல்லாம் மறுத்தார்கள் என்கிற விவரங்களுடன் நேரடியாக அண்ணாமலை ஆதரவாளர்கள் பேசி வருகிறார்கள்.

    நீங்கள் ஓகே சொன்னால் அண்ணாமலையே நேரடியாக பேசுவார். முக்கிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறார்கள். தவெகவில் அதிகளவு மாற்றுக் கட்சியினர் இணைந்து வருவதால் வேறு வழியில்லாத சிலர் அண்ணாமலையுடன் இணையும் முடிவில் இருக்கிறார்களாம். இதேபோல பாஜகவில் களப்பணியில் சிறப்பாக செயல்படும் இளைஞர்கள், நிர்வாககிளையும் குறிவைத்து தங்கள் கட்சிக்கு இழுக்க அண்ணாமலை வலை வீசி வருகிறாராம்.

    English Summary

    Former BJP cadre Annamalai started new party. He's focusing on Kongu politics. trying to catch ADMK DMK leaders to strength ground.