தேதி குறித்த அண்ணாமலை.. ஜுலை 12ல் பொள்ளாச்சியில் We The Leaders அமைப்பின் முதல் மாநாடு

  • சென்னை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஜூலை 12ம் தேதி We The Leaders அமைப்பின் முதல் மாநாடு நடத்தப்படும் என்று அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

    Advertisement

    பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை 'we the leaders' அமைப்பை தொடங்கி செயல்பட்டு வருகிறது. இது தற்போது இயக்கமாக உள்ளது. இதில் உறுப்பினர்கள் தொடர்ந்து சேர்ந்து வருகின்றனர். விரைவில் இது அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

    Advertisement

    இந்நிலையில் தான் 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் முதல் மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஜுலை 12ம் தேதி நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் புதிய மருத்துவமனை திறப்பு விழா இன்று நடந்தது. இதில் அண்ணாமலை பங்கேற்றார். இந்த விழாவில் அண்ணாமலை பேசியபோது தான் மாநாட்டு அறிவிப்பை வெளியிட்டார். இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது:

    "வருகிற ஜுலை 12ம் தேதி மாலை 4 மணிக்கு பொள்ளாச்சியில் நம்முடைய 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் நிறைய சொந்தங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களின் அன்பு என்னை பிரமிக்க வைக்கிறது. உங்களின் அன்பு என்னுடைய கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீரை கொண்டு வருகிறது'' என்று கூறினார்.

    Advertisement

    அண்ணாமலை அறிவித்துள்ள இந்த மாநாடு என்பது 'போதை இல்லா பொள்ளாச்சி விழிப்புணர்வு மாநாடு என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. ஜுலை 12ம் தேதி மாலை 4 மணிக்கு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு நடக்கும் இடத்தில் இதற்கான பந்தகால் இன்று நடப்பட்டது.

    முன்னதாக அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில் 'நம்முடைய 'வி தி லீடர்ஸ்' குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து ஜுலை மாதம் பெரிய முன்னெடுப்பை எடுக்கப்போகிறோம். தமிழகத்தின் தலையாய பிரச்சனையாக ஒன்று உள்ளது. தமிழகத்தில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தலையெழுத்தை மாறும் பிரச்சனை தான் தலையாய பிரச்சனை. அதுதான் போதைப்பொருள் பயன்படுத்தும் கலாசாரம். எங்கே பார்த்தாலும் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது.

    Advertisement

    போதை என்பது தனி மனிதனை மட்டுமின்றி குடும்பத்தை பாதிக்கிறது. குடும்பத்தை பாதித்த பிறகு சமுதாயத்தை பாதிக்கிறது. சமுதாயத்தை பாதித்ததும் நாட்டை பாதிக்கிறது. இதனால் தான் சமுதாயமாக சேர்ந்து போதைப்பொருளுக்கு எதிரான மிகப்பெரிய இயக்கத்தை 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தில் உள்ள எல்லோரும் ஜுலை மாதத்தில் இருந்து முன்னெடுக்க இருக்கிறோம் '' என்று கூறியிருந்தார். அதன்படி ஜுலை 12ம் தேதி போதை இல்லா பொள்ளாச்சி எனும் முதல் மாநாடு நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

    English Summary

    Annamalai, the leader of the 'We The Leaders' organization, has announced that its first conference will be held on July 12 in Pollachi, Coimbatore district.