அவிநாசி சாலையில் 5 நாட்களுக்கு அதிரடி மாற்றம்.. கோவை பயனீர் மில் கிட்ட அதை கவனிச்சீங்களா?

  • கோவை: கோவையின் இதய பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதற்காக அவிநாசி சாலையில் 10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது.

    Advertisement

    மேம்பால கட்டுமானத்திற்காக அவிநாசி சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவை மாநகர், அவிநாசி சாலையில் ஜி.டி மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்ற வந்தது. அதனால் எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டது. தற்போது ஜி.டி மேம்பால கட்டுமான பணிகள் முடிவடைந்து கடந்தாண்டு மேம்பாலம் திறக்கப்பட்டது. தற்போது மேம்பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

    அவிநாசி சாலையில் 5 நாட்களுக்கு மாற்றம்

    தற்போது அவிநாசி சாலையிலுள்ள எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னல்கள், இன்று (13.06.2026) ஆம் தேதி முதல் 17.06.2026 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. இதனால் பயனீர் மில் சந்திப்பு டாமினோஸ் அருகில் உள்ள 'யு' டர்ன் தற்காலிகமாக மூடப்படுகிறது.

    Advertisement

    போக்குவரத்து சிக்னல்

    இதில், போக்குவரத்து சிக்னல் செயல்பாடுகளின் தன்மை மற்றும் வாகன போக்குவரத்தையும் ஆய்வு செய்து, சிக்னல்களில் மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா என்பதையும் ஆய்வு செய்து நிரந்தரமாக போக்குவரத்து சிக்னல்கள் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகளால் பீளமேடு, காந்தி மாநகர், பாரதி காலனி செல்லும் வாகன ஓட்டிகள் பயனடைவார்கள். இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று கூறியுள்ளனர். இதற்கு கோவை மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Avinashi road: Coimbatore city police said, Traffic signal implemented in pioneer mill junction at Avinashi road for next 5 days.