ஸ்டார்ட்அப்களுக்கு எல்லாம் காட் பாதர் ஜிடி நாயுடு.. மாதவன் நடிப்பில் மிரட்ட வரும் GDN!

  • கோவை: இன்று நாம் புதுமை, தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், முதலீடுகள் குறித்து பேசி வருகிறோம். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே வித்தியாசமாக சிந்தித்து சாதனை படைத்த ஒருவர் இருந்தார். அவர் தான் ஜி.டி. நாயுடு.

    Advertisement

    "இந்தியாவின் எடிசன்" என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடு தனித்துவமான ஒரு மனிதர். புதிய விஷயங்களை கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்பாளரின் சிந்தனையையும் தொழில்முனைவோரின் பார்வையையும் ஒருசேர கொண்டிருந்தார். புதிய யோசனைகளை உருவாக்குவதில் மட்டுமே அவர் திருப்தியடையவில்லை. அந்த யோசனைகளை வைத்து புதிய பயனுள்ள பொருட்களை உருவாக்கி, தொழில்துறைகளை மேம்படுத்தி, மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது.

    Advertisement

    ஜி.டி. நாயுடு

    தென்னிந்தியாவின் மிகச் சிறந்த போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யுனிவர்சல் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தை தொடங்கியது முதல் பொறியியல், உற்பத்தி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தார். ஒவ்வொரு துறையிலும் தன்னை முடிந்த வரை எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே சென்றார் ஜி.டி. நாயுடு.

    அவரது மிகப் பெரிய பலங்களில் ஒன்று அவரிடம் இருக்கும் கற்று கொள்ளும் ஆர்வம். அவர் பள்ளிக்கு சென்று படித்தது மிகக் குறைவு என்ற போதிலும், உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்து அங்குள்ள தொழில்நுட்பங்களையும் மற்றும் தொழில்துறை மாற்றங்களையும் நேரடியாகக் கற்று கொண்டார். அவரது இந்த வெளிநாட்டு பயணங்கள் அனைத்தும் இந்தியாவுக்குப் பயன்படும் புதிய அறிவையும் சிந்தனைகளையும் கொண்டு வரும் வாய்ப்பாகவே அவர் கருதினார்.

    Advertisement

    சாதனைக்கு சொந்தக்காரர்

    வெறுமன புத்தகத்தில் இருக்கும் அறிவை விட நடைமுறையில் நமக்கு உதவும் அறிவே முக்கியம் என்பது அவருத நம்பிக்கை. இது தமிழ்நாட்டின் பல தலைமுறை பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. தொடர்ந்து புதிய விஷயங்களை கற்று கொண்டே இருப்பது, புதிய முயற்சிகள், தோல்வியை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் போன்ற பண்புகள் இன்று ஸ்டார்ட்அப் உலகின் அடையாளங்களாகக் கருதப்படுகிறது. ஆனால், அதை பல ஆண்டுகளுக்கு முன்பே தனது வாழ்க்கையில் செய்து காட்டியவர் ஜி.டி. நாயுடு! அதனால் தான் அவரது வாழ்க்கை வரலாறு இன்றுமே இளம் தலைமுறைக்கும் மிகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது. படத்தை எடுக்க ஏற்றதாகவும் இருக்கிறது.

    Advertisement

    G.D.N படம்

    இந்தியாவின் மிக சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் தான் G.D.N.. நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், ஒரு கண்டுபிடிப்பாளரின் சாதனைகளை மட்டுமல்லாமல்.. அந்த சாதனைகளுக்குப் பின்னால் இருந்த மனிதரின் பயணத்தையும் நமக்கு காட்டுகிறது..

    வரலாற்று பதிவுகள்

    ட்ரைகலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை விரிவாக பதிவு செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாராட்டுகளை பெற்ற மாதவன், இப்போது தொழில், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு வரலாற்று நாயகனின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

    Advertisement

    இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கும் புதுமை சிந்தனைக்கும் அடித்தளம் அமைத்த ஒரு நபரை தேசிய அளவில் மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியாக இந்த திரைப்பமட் உருவாகியுள்ளது. ஜி.டி. நாயுடுவின் தனிப்பட்ட போராட்டங்கள், வெற்றிகள் மற்றும் அவரது அசாதாரண சாதனைகள் அனைத்தையும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு இந்தப் படம் ஒரு வரலாற்று பதிவாக மட்டுமல்லாமல் மக்களுக்கு மிக பெரிய நம்பிக்கையை தருவதாக இருக்கும்.

    English Summary

    G.D. Naidu was redefining innovation through entrepreneurship and industrial development(ஜிடி நாயுடு படத்தில் நடிக்கும் நடிகர் மாதவன்): Madhavan acting in G.D.N Biopic.