கோவை குறித்த மத்திய அரசின் பயம் மற்றும் பார்வை தவறானது.. மெட்ரோ ரயில் 100 சதவீதம் ஜெயிக்கும்

  • கோவை: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. பஸ் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதில் கோவையை பொறுத்தவரை சென்னையை போல் பல போக்குவரத்து வசதிகள் சுத்தமாக கிடையாது. எனவே கோவை குறித்த மத்திய அரசின் பயம் மற்றும் பார்வை தவறானது.. ஏனெனில் டவுன்ஹால், உக்கடத்தை கடக்காமல் அங்கு பல பகுதி மக்கள் இன்னொரு பகுதிக்கு போகவே முடியாது. மோசமான நெரிசல் உள்ள பகுதி தான் கோவை. அவினாசி சாலையும் சிக்கலானது. அதேபோல் சரவணம்பட்டி வரை கட்டாயம் மெட்ரோ ரயில் பாதை அவசியம். 100 சதவீதம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் விமானநிலையம்-விம்கோநகர், பரங்கிமலை-சென்ட்ரல் ஆகிய 2 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இது நல்ல வெற்றி பெற்றதால், 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் மாதவரம், சிறுசேரி, பூந்தமல்லி என 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது. இதுவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முழுமையாக முடிந்து பயன்பாட்டிற்கு வரப்போகிறது.

    Advertisement

    கோவை, மதுரை

    இந்த சூழலில் சென்னையை போல் மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. கோவையில் 39 கிலோ மீட்டருக்கும், மதுரையில் 31.93 கிலோ மீட்டர் தொலைவுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே வழங்கியிருந்தது.

    திட்ட அறிக்கை

    இதையடுத்து, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசு மூலம் மத்திய அரசிடம் வழங்கப்பட்டிருந்தது.

    Advertisement


    20 லட்சம் மக்கள் தொகை

    ஆனால் மத்திய அரசு அந்த மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பி அனுப்பியது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க குறைந்தது 20 லட்சம் மக்கள் தொகை தேவை என்றும், 15 லட்சம் மக்கள் தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது என கூறி திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிவிட்டது. இதற்கு மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ஏற்கவில்லை என தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.

    Advertisement

    திருப்பி அனுப்பிய மத்திய அரசு

    இதனைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக திட்ட அறிக்கை கடந்த மே மாதம் மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.இதில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து த.வெ.க. அரசு அமைந்ததும், பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்ற முதல்வர் விஜய் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தவும் கோரிக்கை வைத்தார். இந்த நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்து திருப்பி அனுப்பிஇருக்கிறது.

    நிராகரிப்பு

    மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை எனவும், மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பு இல்லை என்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பதில் பஸ் போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம் என மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    Advertisement

    தமிழக அரசின் வாதம் என்ன

    ஆனால் தமிழக அரசு சில வாதங்களை முன் வைத்திருந்தது. இந்தியாவில் அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. இதில் கோவை தொழில்மயமாக்கப்பட்ட நகரம். இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மதுரை ஆன்மிக சுற்றுலா நகரமாக உள்ளது. எனவே, இங்குள்ள நிரந்தர மக்கள் தொகை மட்டும் கணக்கில் கொள்ளாமல், தினமும் வந்து செல்லும் லட்சக்கணக்கான மக்களை கணக்கில் கொள்ளுங்கள் என்ற வாதங்களை தமிழக அரசு முன்வைத்தது ஆனாலும் மத்திய அரசு கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் சேவை திட்டங்களுக்கு 2-வது முறையாக அனுமதி மறுத்துவிட்டது.

    Advertisement

    மத்திய அரசு அனுமதிக்க என்ன காரணம்

    'நாட்டில் ஆக்ரா, போபால் போன்ற பல நகரங்களில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை . எனவே மத்திய அரசு புதிய மெட்ரோ திட்டம் வெற்றி பெற 100 சதவீதம் வாய்ப்பு உள்ளதா என்பதை கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, மதுரை, கோவையில் தினமும் லட்சத்துக்கும் குறைவானவர்களே மெட்ரோவில் பயணிக்கும் நிலையிருப்பதாக கருதுகிறதாம். அதனால் மெட்ரோ ரயிலை வருவாய் அடிப்படையில் இயக்கி செயல்படுத்த தயங்குகிறதாம். எனவேதான் விரிவான பஸ் போக்குவரத்து திட்டம் மூலம் நெரிசலுக்கு தீர்வு காண பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதாம்.

    100 சதவீதம் ஜெயிக்கும்

    கோவை குறித்த மத்திய அரசின் பயம் மற்றும் பார்வை தவறானது என்றே கோவை தொழில் நிபுணர்கள் கூறுகிறார்கள். அவர்கள் இதுபற்றி கூறும் போது, கோவையை பொறுத்தவரை சென்னையை போல் பல போக்குவரத்து வசதிகள் சுத்தமாக கிடையாது. எனவே கோவை குறித்த மத்திய அரசின் பயம் மற்றும் பார்வை தவறானது..

    கோவையின் நெரிசல்

    ஏனெனில் டவுன்ஹால், உக்கடத்தை கடக்காமல் அங்கு பல பகுதி மக்கள் இன்னொரு பகுதிக்கு போகவே முடியாது. காலை முதல் இரவு வரை, டவுன்ஹால் மற்றும் உக்கடம் மற்றும் கோவையில் உள்ள ரவுண்டானா போன்ற பகுதிகளில் கடுமையான நெரிசல் இருக்கும். இதுதவிர அவினாசி சாலை மற்றும், சத்தி சாலை (சரவணம்பட்டி வரை) போன்ற பகுதிகளில் மெட்ரோ ரயில் பயனுள்ளதாகவே இருக்கும். இந்த பகுகிளில் எல்லாம் மெட்ரோ ரயில் திட்டம் 100 சதவீதம் இப்போதைய மக்கள் தொகைக்கே நிச்சயம் பெற்றி பெறும். இந்தியாவின் வேகமாக வளர்ந்த நகரங்களில் பட்டியலில் கோவையும் உள்ளது.இன்னும் 20 வருடங்களில் கோவை அசுரத்தனமாகவே வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே மெட்ரோ திட்டம் சென்னை போல் வீங்கியபின் தொடங்குவதை விட இப்போதே தொடங்குவது ஓரளவு நியாயமான நடவடிக்கையாக இருக்கும்.

    புறநகர் ரயில் சேவை

    அதேபோல் சென்னைக்கு அடுத்தபடியாக நான்கு பக்கமும் ரயில் வழித்தடமும் இயற்கையாக அமைந்துள்ள நகரம் கோவை ஆகும். எனவே மத்திய அரசு திருப்பூர் வரையிலும், தென் கிழக்கே பொள்ளாச்சி வரையிலும், மேற்கே பாலக்காடு வரையிலும், மேட்டுப்பாளையம் வரையிலும், அடிக்கடி புறநகர் ரயில் சேவைகளை சோதனை அடிப்படையில் தொடங்கலாம். இதன் மூலம் புறநகர் ரயில் சேவையின் மூலம் தொழில் வளர்ச்சி அதிக அளவில் மேம்படும். நிச்சயம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். "இவ்வாறு கூறினார்.

    English Summary

    The Central Government's apprehension and perspective regarding Coimbatore are flawed; the Metro Rail project will be a 100% success.