வேலுமணியால் நடந்த சதி.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத கோவை அதிமுக மா.செ.

  • கோவை: சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள். பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை அதிமுக எஸ்.பி. வேலுமணி கட்டுப்பாட்டில் இருந்தது. அவருக்கு நேர் எதிராக இருந்த முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி பதவிகள் கிடைக்காமல் ஓரங்கட்டுப்பட்டிருந்தார். தற்போது வேலுமணிக்கு வகித்த மாவட்ட செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக எந்த பதவியும் இல்லாமல் அவமானப்படுத்தப்பட்டேன் என்று மேடையிலேயே கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

    Advertisement

    கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,
    "அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. தூய சக்தி என கூறி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது அந்த கட்சியின் பெண் வழக்கறிஞர் ஒருவரே, தமிழகம் முழுவதும் பணம் பெற்று கொண்டு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

    Advertisement

    மேடையில் கண்ணீர் மல்க

    கட்சி தொடங்கியதில் இருந்தே நான் பதவியுடன் இருந்தேன். கடந்த 13 வருட காலமாக கட்சியில் பதவியின்றி பல்வேறு அவமானங்களை சந்தித்தேன். பல கட்சிகளில் இருந்து எனக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை தர முன்வந்தனர். பணம் கொடுத்தும் என்னை அழைத்தனர். நான் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. எங்கோ இருந்த என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பி அமைச்சராக்கியதும், பிறகு மேயராக்கியதும் இந்த கட்சி தான். எனக்கு அவமானம் ஏற்படும்போது வேறு எங்காவது சென்று விடலாமா என்று யோசித்துள்ளேன்.

    ஆனால் இந்த கரைவேட்டியை பார்க்கும்போது அந்த எண்ணம் எனக்கு மாறிவிடும் என்று பேசும்போது மேடையிலேயே கண்ணீர் மல்கினார். தொடர்ந்து பேசிய வேலுசாமி, என்னுடன் தோழமைகளாக இருந்த உங்களையெல்லாம் விட்டுப் பிரிய மனம் இல்லாததால் இன்று வரை இதே இயக்கத்திலேயே இருக்கிறேன்" என்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    தீவில் செந்தில் பாலாஜி

    முன்னதாக கூட்டத்தில் பேசிய மற்றொரு மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன், "அதிமுகவை தீர்ந்து போன கட்சி என்று முதலமைச்சர் கூறுகிறார். பெட்டியை தூக்கிக்கொண்டும், சோபாவை தூக்கிக் கொண்டும் பணத்துடன் ஆள் பிடித்து வருகிறார். சட்டமன்ற தேர்தலில் சுனாமி எதுவும் அடிக்கவில்லை. அப்படி அடித்திருந்தால் ஒன்பது மாவட்டங்களில் ஏன் தவெக வெற்றி பெறவில்லை. தேர்தலின் போது எந்த தலைவரும் உழைக்காதளவுக்கு எடப்பாடி பழனிசாமி பணியாற்றினார்.

    அதிமுகவுக்கு ஏதோ ஒரு சூழ்ச்சி நடந்திருக்கிறது. தவெகவினர் சந்தையில் ஆள் பிடிப்பது போன்று சனிக்கிழமையை பயன்படுத்துகிறார்கள். மேலும் சினிமா தியேட்டரில் டிக்கெட் வழங்க கதவை திறப்பது போல் அக்கட்சிக்காக ஓடுகிறார்கள். என்னை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி அன்று ஜெயிலில் இருந்தார். இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. தூத்துக்குடிக்கு அந்தப் பக்கம் கடல் அருகே ஒரு தீவில் இருப்பதாக தகவல் வருகிறது" என்றார்.

    English Summary

    Coimbatore ADMK Leader SM Velusamy said, For the past 13 years I have not given any post. I was shamed by somebody.