கோவை: கோவை ஆனைமலையில் பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் முருகனின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் நடந்து 2 நாட்களாகிவிட்ட நிலையில், அதுகுறித்த பரபரப்பும் சலசலப்பும் இன்னும் ஓயவில்லை.. டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மருந்து அடிக்கச் சென்ற பேரூராட்சி ஊழியர்களை சுற்றி தொடங்கிய பிரச்சினை, அடுத்தடுத்து பெரிதாகி இந்த அளவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. என்னதான் நடந்தது கோவை ஆனைமலையில்?
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஓடைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். 52 வயதான இவர், திமுக உள்ளூர் நிர்வாகியாக உள்ளார்.. அதேபோல திமுகவை சேர்ந்த இவரது மனைவி விஜயவாணியும், ஒடையகுளம் பேரூராட்சியின் வார்டு கவுன்சிலராக உள்ளார்.
இந்நிலையில் டெங்கு கொசு மருந்து தெளிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், முருகன் மீது ஆறுச்சாமி அரிவாள் உள்ளிட்ட அரிவாளால் வெட்டியிருக்கிறார்.. கடந்த 23-ம் தேதி முருகனின் வீட்டிற்குள் டெங்கு கொசு மருந்து தெளிப்பதற்காக வந்திருக்கிறார்கள்.. உடனே பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முருகனை, ஒடையகுளம் விஏஓ அலுவலகத்துக்கு முன்பு ஆறுச்சாமி என்பவர் அரிவாளால் வெட்டிவிட்டார்.. டெங்கு மருந்து அடிக்க எஸ்.சி ஆட்களை எப்படி எங்க வீட்டுக்குள் அனுப்பலாம்? கேட்டு முருகனின் கையை வெட்டினாராம்.. இதில் முருகனின் வலது கை துண்டானது. கோவை ஆனைமலை உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முருகன் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவக் குழுவினர் சுமார் 8 மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை செய்து, துண்டான அவரது கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தினர். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகனை சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வி. சம்பத்குமார், "வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கமாக முதல் கட்டமாக 25 சதவீத நிவாரணத் தொகையே வழங்கப்படும். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நலனைக் கவனத்தில் கொண்டு, வரலாற்றிலேயே முதல்முறையாக முழு நிவாரணத் தொகையான ரூ.6 லட்சமும் ஒரே தவணையாக உடனடியாக வழங்கப்பட்டுள்ளது" என்றார். வன்னி அரசு வார்னிங் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, "பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், சமூக நீதித் துறையும் தனித்தனியாக இல்லாமல், 2 அமைச்சர்களும் இணைந்து செயல்படுவது சமூக நல்லிணக்கத்தை காட்டுகிறது. சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் அரசாக இருக்கிறது. மக்களை பாதுகாக்கும் அரசாக உள்ளது. இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது என்ற அடிப்படையில் சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் குற்றவாளியின் மனைவி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் வன்கொடுமை சம்பவங்களை கடந்து செல்லாமல் நடவடிக்கை எடுத்து வருகிறோம். யாரும் ஓட முடியாது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்தார். துண்டான வலது கை இந்நிலையில், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியபடி உள்ளன.. இதுகுறித்து விஜயவாணி சொல்லும்போது, "ஆறுச்சாமியின் மனைவிக்கு டெங்கு காய்ச்சல் வந்ததால் பேரூராட்சி ஊழியர்கள் அவரது வீட்டுக்குள் சென்று மருந்து அடித்துள்ளனர். இதில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வீட்டுக்குள் வந்துவிட்டதாக கூறி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்காக என் கணவர் முருகனை, ஆறுச்சாமி மிரட்டியிருக்கிறார்.. 23-ம் தேதி மணியகாரர் அலுவலகம் அருகே என் கணவர் சென்றபோது, அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள்.. இதில் அவரது வலது கை துண்டாகிவிட்டது.. நீ எஸ்சி தானே? என்னிடமும் தகராறு செய்தனர்.. "நீ எஸ்சி தானே? நீ கவுன்சிலர் என்பதால், நீ சொல்லித்தான் எஸ்.சி ஆட்கள் எங்கள் வீட்டுக்குள் வந்து மருந்து அடித்திருக்கிறார்கள் என்று ஆறுச்சாமி தகராறு செய்தார். டெங்கு காய்ச்சல் சரியாக வேண்டும் என்பதற்காக பஞ்சாயத்திலிருந்து மருந்து அடிக்கச் சொன்னது ஒரு குற்றமா? இந்த தாக்குதலுக்கு சாதிய ஆணவமே காரணம்தான், ஆனால் நிலத் தகராறு என்று சொல்லி, பிரச்சினையை திசைதிருப்பவும் ஆறுச்சாமி முயற்சிக்கிறார்" என்கிறார் விஜயவாணி.. இதனிடையே இந்த பிரச்சனை தொடர்பாக பேசிய ஆனைமலை காவல் ஆய்வாளர் சத்தியசீலன், "இரு தரப்பினரிடமும் விசாரித்து வருகிறோம்.. முருகன் எஸ்.சி. என்பதற்கான சான்றிதழ் இருப்பதால், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உறுதி தந்துள்ளாராம்..!!