கோவை: தவெக ஆட்சிக்கு வந்தும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை சரியாகவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கின்றன. கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் அதிர்ச்சி ஓய்வதற்குள் கோவையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அன்னூர் அருகே போதை ஆசாமி ஒருவர் தன்னுடைய பைக்கில் ஒரு காதல் ஜோடியை பின்தொடர்ந்து சென்று அச்சுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் இருந்து அன்னூர் நோக்கி நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் ஒரு காதல் ஜோடி சென்றுள்ளனர். அவர்களுக்கு இருவீட்டாரின் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்களை மதுபோதையில் இருந்த ஆசாமி ஒருவர் பின்தொடர்ந்துள்ளார். போதை ஆசாமி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் முகப்பு விளக்கு, செல்போன் விளக்குகளை ஒளிரச் செய்து அச்சுறுத்தியுள்ளார்.
ஆள் ஆரவாரமில்லாத சாலையில் கும் இருட்டில் பயங்கரமான முறையில் அச்சுறுத்தி சைக்கோத்தனமாக கீழே தள்ளிவிட முயற்சி செய்துள்ளார். மேலும் செல்போனில் தன்னுடைய நண்பர்களை அழைத்து வரச்சொல்லியுள்ளார். காதல் ஜோடி அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக பதறியடித்து சென்றனர். ஆனாலும் அந்த ஆசாமி அவர்களை தொடர்ந்து பாலே செய்து அச்சுறுத்தியுள்ளான். அதனால் அந்த ஜோடி வழியில் இருந்த ஒரு டீக்கடையில் தஞ்சம் புகுந்து தங்களை காத்துக் கொண்டனர். போதை ஆசாமியும் அந்த டீக்கடைக்கு சென்றுள்ளான். அந்த டீக்கடையை நடத்தி வரும் தம்பதியினர் மற்றும் பொதுமக்கள், அந்த போதை ஆசாமியைச் எதற்காக இவர்களை பின்தொடர்ந்து வம்பிழுக்கிறாய் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த ஆசாமி, மதுபோதையில் தள்ளாடியபடி, "நான் தவெகவை சேர்ந்தவன். பெண்களின் பாதுகாப்பிற்காக தான் அவர்களை பின்தொடர்ந்து வந்தேன். எங்கள் தலைவர் தான் பாதுகாப்பு கொடுக்க சொன்னார் பார்க்கச் சொன்னார்" என்று உளறியுள்ளார். கோபமடைந்த காதல் ஜோடி, எங்களை பின்தொடர்வதற்கு நீ யார். எதற்காக அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டாய் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பொது மக்களும் கோபமாக கேள்வி எழுப்பி அவனை கண்டித்துள்ளனர். இந்த சம்பவத்தையும் அந்த காதல் ஜோடி தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவங்களால் பயந்த அந்த ஆசாமி தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு சம்பவ இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட காதல் ஜோடி அந்த நபர் மீது அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.போதை ஆசாமியால் அச்சம்
தவெக உறுப்பினரா
அந்தப் புகாரின் பேரில் அன்னூர் காவல்துறையினர், வீடியோ ஆதாரத்தைக் கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் போதை ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தவோம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அந்த நபர் தாசம்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்துள்ளது.