கோவை: கோவையில் செயல்பட்டு வரும் கம்பெனியில் பணியாற்றும் பெண் ஊழியர் தனது தந்தையை இழந்தார். இதையடுத்து அந்த பெண் ஊழியருக்கு கம்பெனி செய்த செயல்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 4 வாரத்திற்கு மேலாக விடுமுறை வழங்கியதோடு, அந்த ஊழியரின் தந்தையின் மருத்துவ செலவை 20 சதவீதம் வரை ஏற்று கொண்டுள்ள நிலையில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரில் EPict Slope Partners என்ற பெயரில் SaaS குரோத் மார்க்கெட்டிங் ஏஜென்ஸியை தொடங்கி நடத்தி வருபவர் விபின் பாபுராஜன். இவரது சகோதரி ஒருவர் கோவையை மையப்படுத்தி செயல்பட்டு வரும் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கோவை கம்பெனியில் பணியாற்றி வரும் அந்த பெண் ஊழியர் சமீபத்தில் தனது தந்தையை இழந்தார். இதனால் அவர் விடுப்பு எடுத்து சென்றார். இந்நிலையில் தான் தந்தையை இழந்து துக்கத்தில் இருந்து அந்த பெண் ஊழியருக்கு கோவை கம்பெனி செய்த செயல்கள் நெகிழ வைத்துள்ளன. இதுபற்றி விபின்பாபு ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ''என் சகோதரி கோயம்புத்தூரை தளமாக கொண்ட ஒரு பாரம்பரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் அவர் தனது தந்தையை இழந்தார். தந்தையை இழந்த சகோதரிக்கு அந்த கம்பெனி செய்த விபரங்கள் இதோ. * மருத்துவ செலவுகளில் 20 சதவீதத்தை கம்பெனி ஏற்றுக்கொண்டது. இந்த கம்பெனி கடந்த 50+ ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. 40க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர்'' என்று கூறியுள்ளார். இருப்பினும் விபின்பாபு ராஜன் அந்த கம்பெனியின் பெயரை குறிப்பிடவில்லை. இதனால் நெட்டிசன்கள் அந்த கம்பெனி என்ன? என்ன? என்று அவரிடம் கேட்டு வருகின்றனர். அதற்கு அவர் 'R' என்ற எழுத்தில் தொடங்கும் என்று மட்டுமே கூறி வருகின்றனர். பெயர் தெரியாவிட்டாலும் கூட பலரும் அந்த கம்பெனியை பாராட்டி வருகின்றனர். ஒரு நிறுவனம் தனது ஊழியரை மனிதராக பார்த்துள்ளது. குறிப்பாக ஊழியர்கள் தனிப்பட்ட இழப்புகளை சந்திக்கும்போது அவர்களுடன் நிறுவனம் நிற்க வேண்டியது அவசியம் என்று கோவை கம்பெனியை பாராட்டி வருகின்றனர். இன்னொருவரோ, ''ஊழியர் மீது இப்படி கவனம் செலுத்தும் கம்பெனியை பார்த்து நான் வியக்கிறேன். இந்த கம்பெனியின் உரிமையாளருக்கும், கம்பெனியின் வளர்ச்சிக்கும் கடவுளை பிரார்த்திக்கிறேன். வரும் காலத்தில் இந்த கம்பெனி இப்படி ஊழியர்களின் மீது கவனம் செலுத்தும் என நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார். இப்படியாக பலரும் அந்த கம்பெனியை பாராட்டி வருகின்றனர்.
* 4 வாரங்களுக்கு மேல் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கியது
* கம்பெனியின் தலைவர் தனிப்பட்ட முறையில் அவருக்கு மெசேஜ் அனுப்பி தொடர்பு கொண்டார்.