மா.செ. பதவியில் எம்எல்ஏக்கள்.. ஓரங்கட்டப்பட்ட விஜய் ரசிகர்கள்.. கோவை தவெகவில் மோதல்

  • கோவை: கட்சி தொடங்கிய 2 வருடங்களில் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. இந்தியா முழுவதும் இது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பவர் வந்தால் பிராப்லங்களும் சேர்த்தே வரும். தவெகவில் உள்கட்சி பிரச்சனை வெடிக்க தொடங்கியுள்ளது. கோவையில் நீண்ட காலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் பயணித்தவர்களின் மாவட்ட செயலாளர் பதவி பிடுங்கப்பட்டு, அந்தப் பதவிகளில் எம்எல்ஏக்கள் நியமிக்கப்படுவதால் அதிருப்தியடைந்துள்ளனர்.

    Advertisement

    கோவை மாவட்ட தவெக கட்சி ரீதியாக 5 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. மாநகர், வடக்கு, தெற்கு, கிழக்கு, புறநகர் கிழக்கு என்று 5 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தில் நீண்ட காலமாக இருந்தவர்கள் தான் மாவட்ட செயலாளர்களானார்கள். சம்பத்குமார், ராஜ்குமார், விக்னேஷ், பாபு, யுவராஜ் ஆகிய 5 பேர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சம்பத்குமார், விக்னேஷ் ஆகிய இருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது.

    Advertisement

    மாவட்ட செயலாளர் பதவிக்கு குறி

    3 மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கவில்லை. சீட் வழங்கப்பட்ட மற்ற அனைவருமே தேர்தல் நேரத்தில் கட்சியில் இணைந்தவர்கள் தான். கோவை மாவட்டத்தில் தவெக கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த 6 பேருமே அமைச்சர் பதவிக்கு முயற்சி செய்தனர். ஆனால் விஜயுடன் நீண்ட காலமாக பயணித்த சம்பத்குமார், விக்னேஷ் ஆகிய இருவருக்கு தான் அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இதனால் அமைச்சர் பதவியை எதிர்பார்த்த மற்றவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அமைச்சரவையில் மாற்றம் செய்தால் உள்ளே சென்றுவிடலாம் என்கிற எதிர்பார்ப்பில் காய் நகர்த்தி வருகிறார்கள். அதற்கு முன்னதாக கட்சியிலும் வெயிட்டான பதவியை பிடிக்க முயற்சித்து வருகிறார்கள். அமைச்சர் பதவி இல்லையென்றால், மாவட்ட செயலாளர் பதவி வேண்டும் என்று பலரும் பனையூருக்கு படையெடுத்தனர்.

    Advertisement

    அப்செட்டில் தவெகவினர்

    கிழக்கு மாவட்ட செயலராக சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் இருந்தார். அவர் தவெகவின் மாநில துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிங்காநல்லூர் எம்எல்ஏ கிரிபிரசாதை கிழக்கு மாவட்ட செயலாளராக விஜய் நியமித்துள்ளார். அவருடன் கிழக்கு மாவட்டத்துக்கு புதிய இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

    இதே பாணியில் மற்ற எம்எல்ஏக்களும் மாவட்ட செயலாளர் பதவியை குறிவைத்து இயங்கி வருகிறார்கள். இதுகுறித்து கோவை தவெக நிர்வாகிகள் கூறுகையில், "நீண்ட காலமாக இயக்கத்தில் இருந்தவர்களை விட எம்எல்ஏக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்ப்பதுடன், தங்களுக்கு ஏற்ப கட்சி கட்டமைப்பையே மொத்தமாக மாற்றுகிறார்கள். இதனால் விஜயுடன் நீண்ட காலமாக பயணித்தவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள்" என்றனர்.

    English Summary

    Coimbatore TVK MLA's eyes for District Secretaries post. Vijay fans boycotts from powerful posts made tension.