கோவை: கோவை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. அதில் விபத்துகளும், சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றன. ராமநாதபுரம் பகுதியில் 100 அடி உயரத்தில் உள்ள மேம்பாலத்தில் நேற்று ஒரு இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தொங்க தொடங்கினார். மக்கள் பதறியடித்து அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் பிரச்சனை தீவிரமடைந்து வருகிறது. இதை சரி செய்வதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. காந்திபுரம், உக்கடம், திருச்சி சாலை, அவிநாசி சாலை, கவுண்டம்பாளையம் என்று முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்ததோ இல்லையோ சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை.
பாலங்களை கட்டும்போதே முறையான திட்டமிடலின்றி கட்டியதாக சர்ச்சை எழுந்தது. காந்திபுரம் மேம்பாலம் மிகவும் நெட்டுக்குத்தலாக அமைக்கப்பட்டதால் அதனை சூசைட்பாலம் என்று அழைப்பார்கள். திருச்சி சாலை மேம்பாலம் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டன. தமிழகத்திலேயே மிக நீண்டமான பாலம், அவிநாசி சாலையில் திறக்கப்பட்டது. அதிவேகமாக பயணிப்பது மிகப்பெரிய விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மேம்பாலங்களில் சிலர் தற்கொலை செய்வதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் நேற்று மாலை ஒரு இளைஞர் தன்னுடைய அதைப்பார்த்து பொது மக்கள் பதறி சத்தம் எழுப்பினர். அந்த நேரத்தில் மேம்பாலத்தின் மேல் பகுதியில் சென்ற மக்கள், பாலத்தின் மேல் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். சில நிமிடங்கள் போராடி அந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர். பாலத்தின் மீது தொங்கிய இளைஞர் மீட்கப்பட்டதால் பாலத்தின் கீழ் இருந்த பொது மக்கள் நிம்மதி அடைந்தனர். அந்த இளைஞர் குடிபோதையில் தொங்கினாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உக்கடம் மேம்பாலத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் அதிவேகமாக சென்றபோது திடீரென தடுமாறி விழுந்தார். அவரின் பைக் சுமார் 500 மீட்டர் சென்று விழுந்தது. இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேம்பாலத்தில் தொங்கிய இளைஞர்
இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவர் திடீரென தன்னுடைய வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு மேம்பாலத்தின் வெளிப்புறத்தில் தொங்க தொடங்கினார். சுமார் 100 அடி உயரத்தில் இளைஞர் தொங்கிக்கொண்டிருப்பதை, பாலத்தின் கீழிருந்து பார்த்த பொதுமக்கள் பதறினர்.100 அடி உயரத்தில் திக் திக்