அம்பாசமுத்திரம் எங்க கிரவுண்ட்.. கம்யூனிஸ்ட் பக்கா பிளான்.. வீரபாண்டியன் கருத்தால் தவெக ஷாக்

  • கோவை: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அரசியல் களத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்டது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தவெகவை விமர்சனம் செய்து வருகிறார்கள். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அவரை எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளராக ஏற்பார்களா எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அம்பை இடைத்தேர்தல், தவெக ஆதரவு தொடருமா, திமுகவுடனான நெருக்கம் குறித்து சிபிஐ செயலாளர் வீரபாண்டியன் பதில் அளித்துள்ளார்.

    Advertisement

    கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "விலைவாசி உயர்வை கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளோம். பகத்சிங் பிறந்தநாளான மார்ச் 23 ஆம் தேதி, திருச்சியில் சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட கம்யூனிஸ்ட்கள் இணைந்து மாபெரும் பேரணியை நடத்தவுள்ளோம்.

    Advertisement

    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்

    இடைத்தேர்தலில் நாங்கள் குறைவான வாக்குகளை பெற்றோம். இதை சமூகவலைதளங்களில் ஏளனம் செய்கிறார்கள். கம்யூனிஸ்ட்களின் பலத்தை மார்ச் 23 திருச்சியில் பாருங்கள். தேர்தல் செலவை அரசே ஏற்கும்போது எங்களுக்கான வாக்கு அதிகரிக்கும். முதலாளித்துவம் ஆதிக்கம் நிறைந்துள்ள சமூகத்தில் எந்த பணமும் கொடுக்காமல் 1,000 வாக்குகள் பெறுவது சாதாரணமானதல்ல. வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு உழைக்கும் மக்களுடன் நிற்கிறோம்.

    அம்பாசமுத்திரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக உள்ள ஒரு கிளையான அமைப்பு. அம்பையும் பாய்கிற ஆறு சீர்கெட்டுள்ளது. நெல்லையில் ஒட்டியுள்ள ஆறு பிரிந்து போகிற இடம் பெரும்பாலும் சீர்கெட்டுள்ளது. இயற்கை நமக்காக நன்கொடை அளித்த, கலாச்சாரத்தை தொன்மைகளை பாதுகாக்க வேண்டும். அதற்காக குரல் எழுப்புவோம். அதன் பிறகு தான் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல். முதலில் அதற்கு அம்பாசமுத்திரத்திற்கு தேர்தல் தேதியை அறிவிக்கட்டும்.

    Advertisement

    தவெக ஆதரவு தொடருமா

    நாங்கள் எங்களின் முடிவுகளை தெரிவிப்போம். அந்த தொகுதியில் நாம் தமிழர் சீமான் போட்டியிடுவதாக கூறியுள்ளார். அவருக்கு மற்ற கட்சிகள் ஆதரவு குறித்து சொல்லப்படுவது, பேசப்படுவது எல்லாம் இருக்கட்டும். தேர்தல் தேதி அறிவித்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூடி முடிவு செய்வோம். உள்ளாட்சி தேர்தலுக்கும் அதே நிலைப்பாடு தான். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் சூழல்களை பொறுத்து கலந்தாலோசித்து முடிவு செய்வோம். தனித்து போட்டியா, கூட்டணியா என்பதை அப்போதுதான் சொல்ல முடியும்.

    பாஜகவின் பாசிசம், ஆளுநரின் தலையீடு ஆகியவற்றை நாங்கள் எதிர்க்கிறோம். இதை ஆட்சியில் இருந்தபோது திமுகவும் செய்தது. அதனால் அவர்களுடன் நெருக்கமாக இருந்தோம். மக்கள் தீர்ப்பை ஏற்று, ஆளுநரின் அரசியல் செய்ய இடமளிக்க கூடாது என்பதற்காக தவெகவுக்கு வாக்களித்தோம். எளிய மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களுக்காக தவெக பணியாற்ற வேண்டும். நாங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டாலே போதும்.

    Advertisement

    வெறுப்பு அரசியல் நோ

    ஆனால் சபாநாயகர் உள்ளிட்டோர் கம்யூனிஸ்ட்கள் இப்படித்தான் என்று விமர்சிக்கிறார்கள். நாங்கள் வெறுப்பு அரசியல் செய்வோர் அல்ல. பிரதமராக இருந்தாலும் தனி நபரை எதிர்த்து வெறுப்பு அரசியல் செய்ய மாட்டோம். உழைக்கும் மக்களுடன் நிற்கிறோம். அதேபோல தவெகவும் நிற்பார்கள் என மக்கள் நம்புகிறார்கள். அதை நிறைவேற்ற வேண்டும். திமுக, அதிமுகவுடன் தவெகவை ஒப்பிட முடியாது. விமர்சனங்களுக்காக தவெகவுக்கான ஆதரவை வாபஸ் பெறுவது சரியாக இருக்காது. அவர்களுக்கு அவகாசம் வேண்டும்" என்றார்.

    English Summary

    CPI State Secretary Veerapandiyan said, Ambasamudram is our Ground. Soon we will take decision Bi-election.