கோவையில் ஒரே நேரத்தில் 2 பேரையும் காதலித்த பெண்! இப்படியும் நடக்குமா? அடுத்து நடந்த சம்பவம் தெரியுமா

  • கோவை: கோவையில் ஒரு பெண்ணுக்கு காதல் வந்துள்ளது.. அது தவறில்லை.. ஆனால் ஒரே நேரத்தில் 2 பேரை காதலித்துள்ளார்.. எந்த தைரியத்தில் இப்படியொரு காரியத்தை அவர் செய்தார் என்று தெரியவில்லை. ஆனால், ஒரு உயிர் இன்று அநியாயமாய் பறிபோயுள்ளது.. இதுதான் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.. இந்த வழக்கில் கரூரைச் சேர்ந்த 2 பேர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்...!!

    Advertisement

    கோவை தடாகம் அருகே உள்ளது மடத்தூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பிரவீன்.. 24 வயதாகிறது.. இவர் ஒரு போட்டோகிராபர்... கடந்த 2ம் தேதி, தனக்கு ஒரு போட்டோ ஷூட் ஆர்டர் வந்திருப்பதாக வீட்டில் சொல்லிவிட்டு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு கிளம்பி சென்றுள்ளார்..

    Advertisement

    கோவை காதல் ஜோடி

    ஆனால் அதோடு சரி.. அதன்பிறகு பிரவீன் வீட்டுக்கு வரவில்லை.. இதனால் பயந்துபோன குடும்பத்தினர் தடாகம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. இதனால் இநத் புகாரின்பேரில் போலீசார் பிரவீனை வலைவீசி தேடி வந்தார்கள்..

    இப்படிப்பட்ட சூழலில், கிணத்துக்கடவு அருகிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்தது.. உடலும் துண்டாகி கிடந்தது.. போத்தனூர் ரயில்வே போலீசார் இந்த சடலத்தை கைப்பற்றி விசாரணையும் செய்தனர்.. அப்போதுதான் அது காணாமல் போன போட்டோகிராபர் பிரவீன் என்பது தெரியவந்தது... தண்டவாளத்தில் தலை நொறுங்கியும், துண்டாகியும் கிடந்ததால், அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றே போலீசார் முதலில் சந்தேகப்பட்டனர்.

    Advertisement

    இன்ஸ்டா காதலி யார்

    ஆனால் ஒருத்தரும் எதிர்பார்க்காத நிலையில், திடீர் ட்விஸ்ட் ஒன்று நடந்தது.. கரூரை சேர்ந்த மனோஜ்குமார் (26), அவரது நண்பர் கார்த்திகேயன் (27) என்ற 2 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜரானார்கள்.. "நாங்கள் 2 பேரும்தான் சேர்ந்து பிரவீனை திட்டமிட்டு கொலை செய்து தண்டவாளத்தில் வீசினோம்" என்று சொல்லி சரணடைந்தார்கள்.

    இதையடுத்து இவர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டது.. அப்போதுதான் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின.. அதாவது கரூரை சேர்ந்த மனோஜ்குமாரும், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 4 வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி உள்ளனர்.. பிறகு நெருங்கி பழகி, காதலித்தும் வந்துள்ளனர். ஆனால் அந்த பெண், மனோஜ்குமாருடன் தொடர்பில் இருந்துக்கொண்டே போட்டோகிராபர் பிரவீனுடனும் நெருக்கமாக பழக ஆரம்பித்தாராம்.

    Advertisement

    புதிய ஃபோட்டோ ஷூட்

    இந்த விஷயம் மனோஜ்குமாருக்கு தெரிந்துவிட்டது.. தன் காதலியை பிரவீன் பிரித்து கொண்டுவிட்டாரே என்று ஆத்திரமடைந்தார்.. தன்னுடைய காதலுக்கு பிரவீன் தொந்தரவாக இருப்பதாக நினைத்து, ஒரேடியாக அவரை கொன்றுவிட முடிவு செய்தார்., இதற்காகவே பிரவீனின் இன்ஸ்டாகிராம் ஐடியை கண்டுபிடித்தார்.. பிறகு ஒட்டன்சத்திரத்தில் ஒரு போட்டோ ஷூட் இருப்பதாக சொல்லி, போலி ஆர்டர் தந்து, பிரவீனை நேரில் வரவழைத்துள்ளார்.

    அங்கு வந்த பிரவீனிடம், "இப்போ டைம் ஆகிவிட்டது.. நாளைக்கு காலையில் போட்டோ ஷூட் வச்சுக்கலாம். இன்னைக்கு நைட் எங்கள் வீட்டிலேயே தங்கிவிlடுங்க" என்று சொல்லி உள்ளார். இதைக்கேட்ட மனோஜ்குமாரும் அவரது நண்பர் கார்த்திகேயனும் பிரவீனை அழைத்து சென்றுள்ளனர். அங்கு பிரவீனுக்கு, தண்ணி அடிக்க மது வாங்கி வந்துள்ளனர்.. அளவுக்கு அதிகமாக அந்த மதுவை குடிக்க வைத்துள்ளனர்... ஒருகட்டத்தில் பிரவீனுக்கு போதை தலைக்கேறியதுமே, அவரை காரின் முன் சீட்டில் உட்கார வைத்து அழைத்து சென்றுள்ளனர்.

    Advertisement

    2 கொலைகாரர்களும் சரண்

    நள்ளிரவில் காரை ஒரு பாழடைந்த சாலையோரம் நிறுத்திவிட்டு, காரின் உள்ளேயே வைத்து பிரவீனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளனர். பிறகு இது தற்கொலை போல தெரிய வேண்டும் என்பதற்காக, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் பிரவீனின் உடலை வீசிவிட்டு தப்பியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் ஏறியதில் பிரவீனின் தலை துண்டாகியிருக்கிறது.

    போலீசில் எப்படியும் தாங்கள் சிக்கிவிடுவோம் என்று தெரிந்ததுமே, 2 கொலைகாரர்களும் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். இன்ஸ்டா காதலி விவகாரத்தில், இளைஞர் காரில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இதெல்லாம் ஓகே.. ஆனால், ஒருவரை காதலித்துகொண்டே, இன்னொருவரையும் காதலித்த அந்த இன்ஸ்டா பெண் செய்தது சரியா? அந்த பெண்ணுக்கு இதில் தண்டனை எதுவும் இல்லையா??!!

    English Summary

    Do You Know What Happened to the Coimbatore Woman Who Loved Two Men at the Same Time?