கோவை அருகே நெடுஞ்சாலையில் லாரி மீது மோதி நொறுங்கிய கார்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சோகம்

  • கோவை: பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், நல்லம்பள்ளி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். நெடுச்சாலையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் நல்லாம்பள்ளி பகுதியில் உள்ள செடிகளுக்கு இன்று மதியம் லாரி மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டது. அப்போது, உடுமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வேகமாக வந்த கார் நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த லாரி மீது பின்புறத்தில் இருந்து வேகமாக மோதியது.

    Advertisement

    இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கி, முற்றிலுமாகச் சிதைந்துள்ளது. விபத்தில் பலியானவர்கள் மதுக்கரையை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    Five members of the same family died after their car collided with a water tanker near Nallampalli on the Pollachi-Udumalpet National Highway. Preliminary investigations reveal that the car crashed into the tanker—which was watering plants along the highway—after the driver lost control of the vehicle.