கோவை: கடந்த சில ஆண்டுகளாக இந்திய சினிமாவில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சிறந்த ஆளுமைகளின் கதைகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் போது இதுபோன்ற படங்கள் அதிக வரவேற்பைப் பெறுகின்றன.
"ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்" பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் ஆர். மாதவன் மீண்டும் ஒரு நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த முறை, புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவாக அவர் வரவிருக்கும் G.D.N திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான போதே இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த அதீத எதிர்பார்ப்பிற்கு ஜிடி நாயுடு என்ற வரலாற்று ஆளுமையை பற்றிய கதை என்பது ஒரு காரணம் என்றால் இந்த படக்குழு மீதான எதிர்பார்ப்பு மற்றொரு காரணமாகும். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கும் G.D.N திரைப்படத்தை டிரைகலர் ஃபிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. மாதவனுடன் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படம், வலுவான கதையை மட்டுமின்றி ஒரு கலக்கலான தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான வாழ்க்கை வரலாற்றுப் படங்களைப் போல இல்லாமல் G.D.N திரைப்படம் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளர்களிலும் தொழில்துறை முன்னோடிகளிலும் ஒருவராக அறியப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை பயணம் பொறியியல், தொழில்முனைவு, கல்வி மற்றும் உற்பத்தி என பல்வேறு துறைகளை கொண்டதாகும். அவரது கண்டுபிடிப்புகளைப் பற்றி படமாக மட்டும் இல்லாமல்.. அவரது மனஉறுதி, விடாமுயற்சி மற்றும் புதுமைகள் மீதான நம்பிக்கையையும் இந்த படம் பதிவு செய்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்க முக்கிய காரணமே மாதவன் தான். அவர் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆளுமைக்கு எப்படி திரையில் உயிர் கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பே அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் ராக்கெட்ரி திரைப்படத்தில் தனது நடிப்பின் மூலம் அவர் நம்பி நாராயணனாகவே வாழ்ந்தார். அதன் பிறகு உருவாகும் இந்த படத்தில் அவர் ஜி.டி. நாயுடுவாக எப்படி தன்னை மாற்றிக்கொள்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தனித்துவமான வாழ்க்கையை வாழ்ந்த ஜி.டி. நாயுடுவின் கதாபாத்திரத்தில் மாதவன் எவ்வாறு நடிக்க போகிறார் என்பதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த G.D.N படம் நாட்டின் மிகச் சிறந்த மேதைகளில் ஒருவருக்கு செலுத்தப்படும் மரியாதை என தயாரிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன. மேலும், அவரது வாழ்க்கை பயணத்தை அனைத்து தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இது அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறந்த தொழில்நுட்பக் குழு, நட்சத்திரங்கள் நிறைந்த நடிகர் பட்டாளம் மற்றும் வரலாற்றை அடிப்படையாக கொண்ட வலுவான கதை ஆகியவற்றுடன் உருவாகியுள்ள G.D.N மிகவும் எதிர்பார்க்கப்படும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. வரும் நாட்களில் இந்த படம் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகவுள்ளது. அவை நிச்சயம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவே செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லைG.D.N
வெள்ளி திரைக்கு வரும் இந்தியாவின் 'எடிசன்’ ஜி.டி. நாயுடு வாழ்க்கை! மாதவன் நடிப்பில் உருவாகும் G.D.N
ஜிடி நாயுடு
அடுத்த ஜி.டி. நாயுடு யார்? வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ₹10 லட்சம் பரிசு.. நம்பி நாராயணன் நெகிழ்ச்சி
மாதவன்
எதிர்பார்ப்பு