வங்கி டெபாசிட், செல்வ மகள் சேமிப்பு, பொன்மகன் சேமிப்பு, பிஎப் சேமிப்பு உள்ளவர்களுக்கு குட்நியூஸ்

  • சென்னை: ரெப்போ ரேட் உயர்வு காரணமாக கடன் வாங்கியவர்களுக்கு வட்டி உயர்வது ஒருபுறம் எனில், வங்கியில் சேமிப்பவர்களுக்கு கொண்டாட்டமாக மாறி உள்ளது. அதேபோல் பிஎப் கணக்கு வைத்துள்ளவர்ளுக்கும், செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் உள்ளவர்களுக்கு வட்டி உயருகிறது.. மேலும் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கும் வட்டி விகிதம் கணிசமாக உயரப்போகிறது. அதுபற்றி பார்ப்போம்.

    Advertisement

    ரெப்போ ரேட் உயர்வு காரணமாக வங்கிகளில் வைக்கப்படும் நிலையான வைப்புத் தொகைகளுக்கான வட்டியும் 0.25% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வருங்கால வைப்பு நிதி (PF), செல்வமகள் சேமிப்புத் திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம் மற்றும் அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வருவாயும் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    2026 அக்டோபர் நிலவரப்படி வட்டி விகிதங்கள் (அரசு மற்றும் வங்கிச் சேமிப்புகள்)

    செல்வமகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana - SSY): 8.20%

    வருங்கால வைப்பு நிதி (EPF): 8.25%

    அஞ்சலகச் சேமிப்புத் கணக்கு (Post Office Savings): 4.00%

    பொது வைப்பு நிதி (PPF): 7.10%

    மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): 8.20%

    வங்கிகளின் நிலையான வைப்புத் நிதி (Bank FD): 6.50% முதல் 7.50% வரை (வங்கிகள் மற்றும் சேமிக்கும் காலத்தைப் பொறுத்து மாறுகிறது). இதில் மிக சில பிரபலம் ஆகாத தனியார் வங்கிகள் 8 சதவீதம் வரை கூட வட்டி தருகின்றன.

    Advertisement

    தற்போது ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித உயர்த்தி உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களின் வட்டி விகிதங்களும் 0.25% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேமிப்பவர்களுக்கு என்ன லாபம் என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.

    வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கட்ட வேண்டிய புதிய இஎம்ஐ எவ்வளவு? – முழு விவரம்!

    ஒருவர் ₹20 லட்சம் தொகையை வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளார் என்று வைத்துக்கொள்வோம்.

    பழைய வட்டி விகிதம் (7.00%):

    ஆண்டு வட்டி வருமானம்: ₹20,00,000 × 7.00% = ₹1,40,000
    மாத வட்டி வருமானம்: தோராயமாக ₹11,667

    புதிய வட்டி விகிதம் (7.25% - 0.25% உயர்வுக்குப் பின்):

    Advertisement

    வட்டி வருமானம்: ₹20,00,000 × 7.25% = ₹1,45,000
    மாத வட்டி வருமானம்: தோராயமாக ₹12,083

    20 லட்சத்தைச் சேமிப்பாக வைத்துள்ளவருக்கு வட்டி விகிதம் 7%-லிருந்து 7.25% ஆக உயரும் போது ஆண்டுக்குக் கூடுதலாக ₹5,000 கிடைக்கும். மாதம் மாதம் என்றால் ₹416 கூடுதலாக கிடைக்கும். இது உதாரணம் மட்டுமே.. நீங்கள் சேமிக்கும் வட்டி விகிதத்தை பொறுத்து உங்கள் சேமிப்பிற்கான வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை மாறும். முழு விவரங்களை நீங்கள் சேமிக்கும் அஞ்சலகம் மற்றும் வங்கிகளை அணுகி தெளிவு பெறலாம்.

    'வெற்றிப் பயணம்' திட்டம் குறித்த குழப்பம்.. கோவை அரசு பேருந்து நடத்துநர் தந்த விளக்கம்!
    Advertisement

    அதேநேரம் ரிசர்வ் வங்கி இப்போது தான் உயர்வை அறிவித்துள்ளது. இந்த வட்டி உயர்வு நடைமுறைக்கு வருவதை அதிகாரப்பூர்வமாகவே வங்கிகள் அறிவிக்கும். அதன்பிறகு நீங்கள் வங்கியில் அல்லது அஞ்சலக கிளையில் சென்றால் தான் விவரங்களை முழுமையாக அறிய முடியும். பிஎப் கணக்கை பொறுத்தவரை மத்திய அரசு வட்டியை உயர்த்தினால், அது அப்படியே சேமிப்பவர்களின் கணக்கில் ஏறிவிடும். பொன்மகன் சேமிப்பு திட்டம், செல்வ மகள் சேமிப்பு திட்டத்திலும் இதே போன்று தான் கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.

    English Summary

    Due to the hike in the repo rate, interest rates on bank fixed deposits are expected to rise by up to 0.25%. Consequently, there is a strong possibility that interest earnings on the Provident Fund (PF), Selva Magal Savings Scheme, Ponmagan Savings Scheme, and post office savings schemes will also increase.