ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு.. நாளை மிஸ் பண்ணிடாதீங்க

  • கோவை: உங்கள் பெயர் ரேஷன்கார்டில் இருக்கிறது. நீங்கள் மற்றும் உங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இதுவரை ரேஷன் கடைக்கு சென்று பயோமெட்ரிக் வைக்காமல் யாராவது உள்ளார்களா? உடனே உங்கள் ரேஷன் கடைக்கு சென்று பயோமெட்ரிக் வையுங்கள். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ரேஷன் கார்டுகளில் 2.5 லட்சம் பேர் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்களுக்காக இன்று சிறப்பு முகாம் நடந்துள்ளது. நாளையும் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

    Advertisement

    கோவை மாவட்டத்தில் 11.50 லட்சம் ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் உள்ளன. இந்த கார்டுதாரர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை உள்பட பொருட்கள் வாங்கி வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் மொத்தம்1,453 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    Advertisement

    இந்த நிலையில் ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது இறந்தால், அவர்களது பெயர் நீக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொது விநியோக திட்டம் சார்பில் ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடம் இருந்தும் கைரேகை அல்லது கருவிழி(பயோமெட்ரிக்) பதிவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள குடும்ப உறுப்பினர்களில் 96 சதவீதம் வரை கைரேகை பதிவு பெறப்பட்டிருக்கிறது. விடுபட்டவர்களை கண்டறிந்து வீடு, வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் கைரேகை பதிவு பெறும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    Advertisement

    எனினும் தற்போது வரை 2.5 லட்சம் பேர் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே விடுபட்டவர்கள் கைரேகை பதிவு செய்ய வசதியாக இன்று சிறப்பு முகாம் நடந்துள்ளது. நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 4 லட்சம் பேர் தங்களது கைரேகையை பதிவு செய்யாமல் இருந்தார்கள். எனவே கோவை மாவட்ட நிர்வாகம் பயோமெட்ரிக் பெறுவதற்காக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் தங்களது கைரேகையை பதிவு செய்தனர். கடந்த 2-ந் தேதி நடைபெற்ற சிறப்பு முகாமில் 14 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். விடுபட்டவர்களுக்காக இன்று சிறப்பு முகாம் நடந்தது. நாளையும் 2 சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று தங்களது கைரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என அவர்கள் கூறினார்கள்.

    Advertisement

    இப்போது பிஓஎஸ் இயந்திரம் மூலம் கைரேகை சரிபார்ப்பு கட்டாயமாக்கி உள்ளது தமிழக அரசு. எனவே கைரேகை பதிவு செய்யாவிட்டால் ரேஷன் கடைப் பணியாளர்களால் பொருட்களை விநியோகிக்க முடியாமல் போகும். தமிழக அரசை பொறுத்தவரை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களின் இகேஒய்சி சரிபார்பை முடிக்க விரும்புகிறது. எனவே பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு சிக்கல் வரலாம். உதாரணமாக பயோமெட்ரிக் பதிவு செய்யப்படாத நபர்களுக்கான அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற பொருட்களின் அளவு குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பயோமெட்ரிக் வைக்காதவர்கள் உடனே விண்ணப்பிப்பது நல்லது.

    English Summary

    Please visit your ration shop immediately to complete the biometric registration. In Coimbatore district, 2.5 lakh ration cardholders have not yet registered their fingerprints. A special camp for this purpose was held today, and another will be conducted tomorrow.