“கோவை என்ன பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா?” தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

  • சென்னை: பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி கிடையாது, பாஜகவுக்கு அனுமதி கிடையாது, தவெகவுக்கு மட்டும் அனுமதியா என தமிழக அரசின் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

    Advertisement

    கோவை நகரம் என்ன பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா? தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்வது பாவச் செயலா? நீதிபதி அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பி உள்ளார்.

    Advertisement

    கோவையில் பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி நடத்த போலீசார் அனுமதி மறுத்ததற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ்குமார் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சரமாரியாக பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.

    பேரணியில் தேசியக்கொடியை எடுத்துச் செல்லக்கூடாது என்று போலீசார் சொல்கிறார்களா? கொடி இல்லையென்றால், உங்களுக்கு உரிமைகளே இருக்காது. இது வருத்தம் அளிக்கிறது.

    கொடியை ஏந்தியதற்காகவே தன் உயிரைத் தியாகம் செய்த திருப்பூர் குமரனின் பூமி இது, அப்படிப்பட்ட இடத்தில் கொடியை ஏந்திச் செல்ல அனுமதிக்கவில்லையா? போராட்டங்கள் நடைபெறும் காஷ்மீரில் கூட மக்கள் கொடிகளை ஏந்திச் செல்கிறார்களே.

    Advertisement

    அரசியல் பாகுபாடின்றி, நம் தேசியக் கொடி குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். கோவை என்ன பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் இருக்கிறதா? தேசியக் கொடியை ஏந்தி பேரணி நடத்துவது பாவச்செயலா?

    பேரணி நடத்த திகவுக்கு அனுமதி இல்லை, பாஜவுக்கு அனுமதி இல்லை, தவெகவுக்கு மட்டும் அனுமதியா? போலீசார் ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயல்படக்கூடாது. தேசியக் கொடியை ஏந்திச் செல்வதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுமா? என நீதிபதி அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினார்.

    அதோடு, பேரணிக்கு அனுமதி வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    English Summary

    Madras High Court has sharply questioned the Tamil Nadu police, asking why permission is denied to the Dravidar Kazhagam and the BJP while being granted only to the TVK. "Is the city of Coimbatore located in Pakistan or Afghanistan? Is taking out a rally while carrying the national flag a sinful act?" the judge asked pointedly.