நேபாள வெள்ளம்! ஈஷா குழுவினர் 80 பேர் மாயம்! கதறிய ஜக்கிவாசுதேவ்! விம்மிய சீடர்கள்!

  • கோவை: நேபாள வெள்ளத்தில் காணாமல் போன கோவை ஈஷா மையத்தை சேர்ந்த 80 பேர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை கண்டுபிடிக்க எங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என நேபாள நாட்டுக்கு ஜக்கிவாசுதேவ் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற இந்தியர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஈஷா அறக்கட்டளை சார்பில் கைலாச யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Advertisement

    அந்த வகையில் இந்த ஆண்டு உலகம் முழுவதும் இருந்து ஈஷா யோகா மையத்தை சேர்ந்தவர்கள் கைலாய யாத்திரைக்குச் சென்றனராம். அவர்களில் 80 பேர் மாயமாகிவிட்டனராம். அவர்களை காணவில்லை என ஜக்கிவாசுதேவ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவருடைய சீடர்களுக்கும் கண்ணீருடன் பகிர்ந்த போது அவர்களும் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது. இந்த வீடியோவில் ஜக்கி வாசுதேவ் பேசுகையில், நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்ற ஈஷா மையத்தைச் சேர்ந்த 80 பேர் கொண்ட குழுவுடன் தொடர்பு கிடைக்கவில்லை.

    80 பேரில் 34 பேர் ஆண்கள், 46 பேர் பெண்கள். ஈஷா குழுவில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்களாவர்.

    Advertisement

    அமெரிக்கா- 22
    கனடா- 12
    ஆஸ்திரேலியா- 11
    பிரிட்டன்- 9
    ஜெர்மனி - 4
    பிரான்ஸ்- 3
    நேபாளம்- 3
    நெதர்லாந்து- 2
    சிங்கப்பூர்- 2
    ஸ்பெயின்- 2
    ஹங்கேரி, போர்ச்சுகல், ஃபின்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர்

    இவர்களுடன் 3 தன்னார்வலர்கள், 1 மருத்துவரும் உடன் இருந்துள்ளனர். இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

    இதுவரை அதிகாரபூர்வமாக நேபாளில் இருந்து தகவல் இல்லை. சுமார் 20 ஆண்டுகளாக ஈஷா உடன் பயணித்து வரும் பிரவீண் என்ற குழு தலைவரிடம் இருந்து 9.05 மணிக்கு immigration centre வந்து விட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

    Advertisement

    9.14 மணிக்கு இந்த பேரிடர் ஏற்பட்டது. இப்போது அவர் அலைபேசி இணைப்பில் இல்லை. இந்த மொத்த குழுவும் பேரிடரில் பாதிக்கப்பட்ட immigration முகாம் அறையில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. இப்போது வரை எவ்வளவு பேர் உயிரிழப்பு என தகவல் இல்லை. அவர்களின் நிலை அறிய இந்தியா, அமெரிக்கா , சீனா தூதரகம் மூலம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம்.. மீட்பு பணிகளில் ஈஷா மையத்தினரையும் ஈடுபடுத்த வேண்டும் என நேபாள நாட்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.

    English Summary

    Jaggi Vasudev shed tears about Isha foundation members who went missing in Nepal floods. He also urged to take their help to rescue work.