இளம்பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு.. கோவையை பதறவைத்த ரவுடி வழக்கில் டிவிஸ்ட்

  • கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிப்படைந்துள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. திமுக ஆட்சியில் இருந்த சட்டம் ஒழுங்கு பாதிப்பு தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. பெண்கள் பாதுகாப்புக்காக சிங்க பெண் படை அமைக்கப்பட்டும் குற்றங்கள் குறையவில்லை. கோவை தொண்டாமுத்தூர் அருகே காதல் விவகாரத்தில் இளம் பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சம்பவம் கடந்த மே மாதம் நடைபெற்றது. 2 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    Advertisement

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது சென்னையை சேர்ந்த கார்த்திக் என்கிற மாரியப்பன் என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருவரும் காதலி காதலித்தனர். நாளடைவில் கார்த்திக்கின் நடவடிக்கையில் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கார்த்திக் மீது ஏராளமான குற்ற வழக்குகள் இருப்பதால் இளம் பெண் அவருடன் பேசுவதை நிறுத்தினார்.

    Advertisement

    இளம் பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில்

    காதல் முறிந்ததால் கார்த்திக் இளம் பெண் மீது கோபமடைந்தார். இளம்பெண்ணை தன்னை காதலிக்கு வற்புறுத்தி அவர் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மே மாதம் 25 ஆம் தேதி மாலை கார்த்திக் தனது நண்பர்கள் மூன்று பேருடன் இணைந்து கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள மாணவியின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி சென்றனர்.

    மேலும் இளம்பெண்ணின் தந்தை சுந்தரமூர்த்தியை தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். மண்ணெண்ணெய் பாட்டில் வீசியதில் வீட்டின் போர்டிகோ பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறை உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியது. சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    Advertisement

    2.5 மாதங்களுக்கு பிறகு கைது

    ஆனால் கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக சம்பவத்தில் தொடர்புடைய யாருமே சிக்கவில்லை. காவல்துறையினர் தனிப்படை அமைத்து பல்வேறு மாவட்டங்களில் விசாரித்தும் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கார்த்திக்கின் நெருங்கிய நண்பனான ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த கிருத்திக் ரோஷன், கோவை வீரகேரளம் பகுதியில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்று கிருத்திக்கை கைது செய்தனர்.

    கார்த்திக்குடன் இணைந்து கிருத்திக்கும் மாணவி வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசினார். இந்த வழக்கில் அவர் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார்த்திக் மீது கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 31க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கார்த்திக் உள்ளிட்ட மற்றவர்கள் குறித்து கிருத்திக் ரோஷனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    A man was arrested two months after a kerosene bottle was allegedly hurled at a young woman’s house near Thondamuthur, Coimbatore, over a love dispute.