சென்னை: கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு கொள்முதல் செய்த புத்தகங்கள் சந்தை விலையை விட அதிக விலைக்கு கொள்முதல் செய்தது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழக அரசியலில் தற்போது ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையில் அம்பலமாகியுள்ளது. "நாலடியார் வாழ்வின் வழிகாட்டி" என்ற புத்தகத்தில் நாலடியார் கவிஞர் என எழுதியுள்ளதாகவும் 1969 ஆம் ஆம் ஆண்டு ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார் என்று இன்னொரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அது போல் இந்த முறைகேடுகள் மூலம் யாருக்குப் பணம் சென்றது, எத்தனை நூல்கள் விநியோகிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணைக் குழு அமைத்து உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் இதே போல் கடந்த 2011 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் இது போன்றதொரு ஊழல் நடைபெற்றது தற்போது நினைவுக்கூரத்தக்கது. சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்ட கடந்த 2008ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து பேரறிஞர் அண்ணாவின் 102 ஆவது பிறந்தநாளையொட்டி, கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, அந்த நூலகத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இது முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் 8 மாடிகளை கொண்ட பிரம்மாண்ட கட்டடம் இது. இங்கு கண்பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி நூல்கள், அவர்கள் படிப்பதற்கு உதவும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் உள்ளன. உலகத்தரம் வாய்ந்த கணினி வசதிகள், இணையதள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான எண்ணற்ற புத்தகங்கள் இங்கு உள்ளன. இப்படிப்பட்ட நூலகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்தது. இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது. உள்ளூர் நூலக ஆணைக் குழு ஊழியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் அறிவரசு பாண்டியன் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை பெற்றார். அதில் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் சந்தை விலையை விட அதிக விலைக்கு வாங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக பிராடிகல்ஸ், ரேடிகல்ஸ் இன் எக்சைடைட் ஸ்டேட்ஸ் என்ற புத்தகம் வெளிசந்தையில் ரூ 89,319 என்று விலைக்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த புத்தகத்தை ரூ 1,44,098-க்கு கொள்முதல் செய்துள்ளனர். அதாவது ரூ.54,779 கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. அதே போல் ஜியோலைட் ஸ்ட்ரக்சர் கோட்ஸ் என்ற புத்தகம் ரூ 1,07,712-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த புத்தகம் 70 ஆயிரம் அதிகம் கொடுத்து அதாவது 1,77,497 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இது போல் 39 புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டது பாண்டியன் மூலம் அம்பலமானது. இதனால் அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டது. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு புத்தகங்களை வாங்க டெண்டர் கோரப்பட்டதா என்ற கேள்விக்கு டெண்டர் கோரப்படவில்லை என்றும் நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புத்தகங்கள் வாங்கப்பட்டதாகவும் ஆர்டிஐ தகவலில் பதில் கிடைத்தது. பொதுவாக அரசு விதிகளின்படி ரூ 50 லட்சத்திற்கும் அதிகமாக பொருள்களை வாங்கும்பேது வெளிப்படையான டெண்டர் மூலமாகவே வாங்க வேண்டும். எனவே அண்ணா நூலகத்தில் புத்தகங்கள் வாங்கியதில் விதிகள் மீறப்பட்டது. நூலகத்திற்காக தமிழக அரசு சார்பில் ரூ 20 கோடி மட்டுமே அளிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ 165 கோடி உள்ளூர் நூலக ஆணைக் குழுவின் நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நூலக நிதிகளில் இருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் விதிகளுக்கு முரணானது.கோட்டூர்புரத்தில் பிரம்மாண்டம்
8 ஏக்கரில் நூலகம்
தகவல் அறியும் சட்டம் (RTI)
ஜெயமோகன் பொங்கிட்டாரே.. பெரியார் நூலகத்தில் ஊழல் பண்ண அயோக்கியன் யார்? உடனே எரிக்கணும்! என்ன நடந்தது
அதிக விலைக்கு புத்தகங்கள்
70 ஆயிரம் கூடுதல் விலை
ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. பெரியார் பேரைச் சொல்லி ஏமாத்திட்டாங்களே! வேதனையுடன் பேசிய செங்கோட்டையன்!
டெண்டர்