சாதி மதத்தை வீட்டுல வச்சு பூட்டிட்டு வருவேன்! அண்ணாமலையா இப்படி பேசுறது? இதற்கு முன் பேசியதை பாருங்க

  • கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் இன்று நடந்த 'வீ த லீடர்ஸ்' என்கிற அமைப்பின் மாநாட்டில் பேசிய அண்ணாமலை, சாதியையும், மதத்தையும் வீட்டில் வைத்து பூட்டிவிட்டுதான் அமைப்பின் பணிகளுக்கு வருவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் வரை அவர், இந்து மதம் குறித்து பெருமையாக பேசியிருந்தார். அப்படி இருக்கையில் உடனே மாற்றம் வந்துவிட்டதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    Advertisement

    பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை இருந்த காலத்தில், அக்கட்சியின் வாக்கு வங்கி.. டபுள் டிஜிட் அளவுக்கு உயர்ந்திருந்தது. ஆனால், என்ன பிரயோஜனம்? அவரை மாநில தலைவர் பொறுப்பிலிருந்து தூக்கியது பாஜக தலைமை. மட்டுமல்லாது அவருக்கு வேறு எந்த முக்கியமான பதவியையும் கொடுக்கவில்லை.

    Advertisement

    முதல் மாநாடு

    இப்படி இருக்கையில், சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த அவர், தன்னுடைய 'வீ த லீடர்ஸ்' எனும் அமைப்பை பலப்படுத்துவதாக அறிவித்தார். அப்படியாக இந்த அமைப்பின் முதல் மாநாடு இன்று கோவை பொள்ளாச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

    மதத்தை பூட்டி வைத்துவிட்டு வருவேன்

    "நான் இந்துதான். ஆனால், நான் வீட்டை விட்டு வெளியே வரும்போது என்னுடைய மதத்தையும், சாதியையும் வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வருகிறேன். நான் எந்த மதத்தையும் தூக்கி பிடிக்க வேண்டியதில்லை. அதானல்தான் இன்று இந்த மாநாட்டில் மற்ற மதங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். நான் பாஜகவின் தலைவர்வகளை மோடியை திட்டவில்லை என்பதால்.. நான் பாஜகவின் பி டீம் என்று திமுகவினர் விமர்சிக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

    Advertisement

    அண்ணாமலையா இப்படி?

    உண்மையில் ஒருவர் சாதி, மத ஆதிக்கத்தை கைவிடுவது என்பது நல்ல விஷயம்தான். அண்ணாமலையும் அப்படித்தான் பேசியிருக்கிறார். ஆனால், அவர் அடிப்படையில் இந்துத்துவவாதி என்றும், அவரால் எப்படி மத ஆதிக்கத்தை கைவிட முடியும் என்றும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இதற்கு ஆதாரமாக அண்ணாமலை பாஜகவில் இருக்கும்போது என்னென்ன பேசினாரோ அதையெல்லாம் லிஸ்ட் போடுகின்றனர்.

    சனாதனம் குறித்து அண்ணாமலை

    சனாதனம் குறித்து அண்ணாமலை மிகப்பெருமையாக பேசியிருந்தார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக பேசியபோது, அதை இந்து மக்களுக்கு எதிரான பேச்சாக அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். சனாதனத்தை ஒழிப்பது என்பது நாட்டில் உள்ள 80% இந்து மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தை அழிப்பதற்கு சமம் என்று கூறியிருந்தார் அண்ணாமலை.

    Advertisement

    மதமாற்றம்

    இது மட்டுமல்லாது இந்து மதத்திற்கு எதிரான வேலைகள் நடந்து வருவதாகவம், தமிழகத்தில் அது தீவிரமாக இருக்கிறது என்றும் கூட அவர் கூறியிருந்தார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில்.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் மத்தியில் கிறிஸ்தவ மெஷினரிகள் துண்டு பிரசுரம் கொடுத்து மத மாற்றம் செய்யும் முயற்சியை மேற்கொண்டதாக பேசியிருந்தார்.

    இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்

    இதைவிட ஹைலைட் என்னவெனில், இந்துக்கள் தங்கள் மத அடையாளத்திற்காக ஒன்றிணைய வேண்டும் என்று அண்ணாமலை பேசியிருந்ததுதுதான். இதற்காக இந்துக்கள் ஆக்ரோஷமாக ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

    Advertisement

    அப்படியெல்லாம் பேசிய அண்ணாமலையா.. ஓரிரு மாதங்களில் மதத்தை வீட்டில் வைத்து பூட்டி விட்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார்? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    English Summary

    Annamalai: Speaking today at a conference held in Pollachi by the organization 'We the Leaders,' Annamalai stated that he would leave caste and religion locked away at home before engaging in the organization's work. However, netizens are questioning whether such a sudden shift has occurred, given that he had spoken proudly about Hinduism just a few months ago.