மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?

  • கோவை: கோவை மாநகரின் வடவள்ளி பகுதியில் நள்ளிரவு நேரத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சியளிக்கும் சம்பவம், ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அதிர வைத்துள்ளது. சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த தனியார் மினி பஸ்ஸில் இப்படியொரு துணிச்சல் சம்பவம் நடந்துள்ளது.. இதுதொடர்பான சிசிடிவி கேமரா பதிவும் வெளியாகி, ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையும் உலுக்கி வருகிறது. என்ன நடந்தது?

    Advertisement

    கோவை மாவட்டத்தில் பொதுமக்களின் முக்கியப் போக்குவரத்து தேவைகளுக்காக ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் வடவள்ளி பகுதியில் தங்களது தினசரி பயண சேவையை முடித்த மினி பஸ் ஒன்றின் ஊழியர்கள், நள்ளிரவில் அதனை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டார்கள்.

    Advertisement

    கோவை வடவள்ளி மினி பஸ்

    சரியாக நள்ளிரவு 12 மணியை தாண்டிய நிலையில், அந்த பகுதிக்கு இளைஞரும், ஒரு பெண்ணும் ஜோடியாக வந்துள்ளனர். 2 பேரும் அங்கு சிறிது நேரம் நின்று, சந்தேகத்திற்கு இடமான வகையில் நோட்டமிட்டுள்ளனர். சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்த அந்த ஜோடி, சத்தமில்லாமல் அந்த மினி பஸ்ஸுக்குள் ஏறியுள்ளனர்.

    உள்ளே நுழைந்த உடனே உஷாரான அந்த இளைஞர, வெளி ஆட்களுக்கு சந்தேகம் வராதபடி பஸ்ஸில் இருந்த லைட்டுகளை அணைத்து விட்டார்..


    ஜோடி 45 நிமிடம் அட்டகாசம்

    அதுமட்டுமின்றி, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே நடப்பது தெரியக்கூடாது என்பதற்காக, பஸ்ஸின் ஒவ்வொரு ஜன்னல் கதவுகளையும் மிக விவரமாக மூடியுள்ளார். பஸ்ஸின் உட்புறத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கவனித்த அந்த இளைஞர், தங்களின் லீலைகள் பதிவாகாமல் இருக்க அந்த கேமராவை அப்படியே வேறு பக்கமாகத் திருப்பி, திசை மாற்றி வைத்துள்ளார்.

    Advertisement

    பிறகு சுமார் 45 நிமிடங்கள் கழித்து, அந்த ஜோடி பஸ்ஸிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள்.. அதுவும் சும்மா வெளியேறவில்லை, மினி பஸ்ஸில் என்ஜின் பகுதியில் இருந்த காஸ்ட்லி பேட்டரியை கழற்றியுள்ளார்... பயணிகள் உட்காரும் ஒரு குஷன் சீட்டையும் கையில் தூக்கிக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கியிருக்கிறார்கள்.. விடியும் நேரத்துக்கு முன்பாகவே 2 பேரும் அங்கிருந்து தப்பியுள்ளார்கள்.. இவர்கள் வெளியேறிய காட்சிகள் அந்தப் பகுதியில் இருந்த வேறொரு சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

    மினி பஸ்ஸில் அட்டகாசம்

    மறுநாள் காலை பஸ்ஸை இயக்க வந்த டிரைவரும், கண்டக்டரும் பேட்டரி மற்றும் சீட் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பஸ்ஸில் இருந்த சிசிடிவி காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தபோதுதான், நள்ளிரவில் புகுந்த காதல் ஜோடி உல்லாசமாக இருந்துவிட்டு, பொருட்களைத் திருடிச் சென்ற விசித்திரம் வெளிச்சத்திற்கு வந்தது.

    Advertisement

    இது தொடர்பாக பஸ் டிரைவர்கள் கொடுத்த புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் சிசிடிவி காட்சிகளை அக்குவேறு ஆணிவேறாக அலசி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வீடியோவில் ஆராய்ந்தபோது, அந்த பெண் சுடிதார் அணிந்துள்ளாராம்.. கையில் வாட்டர் பாட்டில் வைத்துள்ளார்.. அவருடன் வந்த இளைஞரின் கையில் டாட்டூ குத்தப்பட்டு பார்ப்பதற்கு வட மாநிலத் தோற்றம் கொண்டராக இருக்கிறாராம்.

    இதனிடையே இந்த ஜோடியின் லீலைகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, தற்போது காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது...!!!

    English Summary

    Mini Bus Lights Switched Off for 45 Minutes… What Did the Coimbatore Couple Take Away Before Leaving?