நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்

  • கோவை: தவெக ஆட்சியமைத்து 3 வாரங்களாகிவிட்டன. அமைச்சர்கள் அவரவர் சார்ந்த துறைகள், மாவட்டங்களில் சர்ப்ரைஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கோயில்களில் மாறுவேடத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் நள்ளிரவில் சர்ப்ரைஸ் ஆய்வு செய்தார். மருத்துவர்கள், பணியாளர்கள் சரியாக பணி செய்கிறார்களா, மருத்துவமனைக்கு வருகிறார்களா, சிகிச்சை முறையாக வழங்கப்படுகிறதா என்பதை பல்வேறு பிரிவுகளுக்கு சென்று சுமார் 3 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.

    Advertisement

    கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத் குமார் நள்ளிரவு திடீரென கோவை அரசு மருத்துவமனையில் சர்ப்ரைஸ் ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனையில் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என ஆய்வு செய்தார். நள்ளிரவு டிஷர்ட் அணிந்தபடி மருத்துவமனையில் சர்ப்ரைஸ் ரெய்டு மேற்கொண்டார்.

    Advertisement

    கோவை அரசு மருத்துவமனை ஆய்வு

    சம்பத் குமார் நேற்று முன்தினம் மதியம் கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்திருந்தார். அப்போது அவரிடம் பொது மக்கள், பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சம்பத் குமார், பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். சிகிச்சை, சுகாதாரம் ஆகியவற்றில் எந்த குறையும் இருக்க கூடாது. நான் மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்வேன் என்று கூறியிருந்தார்.

    நள்ளிரவு நேரம் என்பதால் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் யாரும் அவருடன் செல்லவில்லை. கார் டிரைவருடன் மட்டும் சென்று கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு மேற்கோண்டார். தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்களின் பட்டியலை கையில் எடுத்து, அனைவரும் பணியில் இருக்கிறார்களா என்று சோதனை செய்தார்.

    Advertisement

    அமைச்சர் ஆய்வு

    வருகை பதிவேடு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்றும் அவர் ஆய்வு செய்தார். தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் சரியாக மேற்கொள்ளப்படுகின்றனவா என்று ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை பிரிவுகள் குறித்தும் , வெளி நோயாளிகள் பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களிடம் கருத்துகளை கேட்டு மருத்துவர்கள், பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    English Summary

    Minister Sampath Kumar: Backward classes Welfare Minister Sampath Kumar surprise visit to Coimbatore Government Hospital in Midnight. He inspected around 3 hours about hospital services.