கோவை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை, நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் அடியோடு மாறியுள்ளது. சென்னையில் தவெகவினரை நிவாரண பணிகளுக்கு திமுக மேயர் பிரியா தடையாக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை தொடர்பான பணிகளை முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். வடகிழக்கு பருவமழையின்போது பொதுமக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். இதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பொது வாழ்க்கையில் மக்கள் பணி என்பது எல்லோருக்குமானது. எல்லா இயக்கத்தை சேர்ந்தவர்களும் செய்யலாம். மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் கட்சி பாகுபடின்றி பணியாற்ற வேண்டும். திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் தடையாகவே உள்ளனர். களத்தில் அரசு செய்யும் பணிகளுக்கு சென்னை மாநகராட்சி மேயர் உதவியாக இருக்க வேண்டும். நிவாரண பணிகளுக்கு அவர் இடையூறாக இருக்கக் கூடாது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, ராமநாதபுரம் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் என்ன நிலை இருக்கிறது என்பதை வானிலை மையங்கள் மூலமாக ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதை விமர்சிக்கிறார்க்ள. முதலமைச்சர் சுற்றுப்பயணத்தின்போது, அனுமதியே இல்லாமல் உள்ளே நுழைந்தது சரியாக இருக்குமா என்ற இடத்தில் அவர் தான் பதில் சொல்ல வேண்டும். ஜனநாயகத்தின் எல்லோருக்கும் தேர்தல் களத்தில் இடமுண்டு. லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் பொழுது இடையூறு ஏற்படுத்துவது சரியா என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். கைது செய்த போது அவர் என்ன உடையில் இருந்தார் எனக்கு தெரியாது. அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. என்னுடைய பொறுப்புக்கு நான் பதில் சொல்ல முடியாது" என்றார். ஏற்கனவே தவெக எம்எல்ஏக்கள் மேயர் பிரியாவை கண்டித்த நிலையில், அமைச்சர்களும் அவரை கண்டிக்க தொடங்கியுள்ளனர்.பணி எல்லாருக்குமானது
இது சரியா