டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்

  • கோவை: தவெக ஆட்சியில் ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். டாஸ்மாக்கில் எக்கச்சக்க ஊழல்கள் நடந்துள்ளன. பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று விஜய் தேர்தலுக்கு முன்பு பாட்டெல்லாம் பாடினார். ஆனால் தவெக ஆட்சியிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் ஊழல் மாறவில்லை என்ற புகார் உள்ளது. இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தவெகவை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் டாஸ்மாக் துறையில் கடந்த ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. செந்தில் பாலாஜியின் விமர்சனம் குறித்தும் அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.

    Advertisement

    கோவையில் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்களது லட்சியம். இந்த இலக்கை அடையச் சுதந்திரமாகச் செயல்படுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். சில மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

    Advertisement

    போதைப்பொருள் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டிற்குள் எந்த வழியிலும் போதைப்பொருள் நுழைவதையும் அனுமதிக்க மாட்டோம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போன்று பேசுபவர்கள் நாங்கள் கிடையாது. டாஸ்மாக் துறையில் தற்போது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறோம். தனிநபர்கள் மற்றும் கட்சிக்காரர்களிடம் சென்று கொண்டிருந்த ரூ.1,000 கோடி ஊழல் பணம் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கான முறையான அரசாணை ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மட்டுமல்லாது எந்தத் துறையிலும் இனி ஊழல் இருக்காது என்பது தவெகவின் உறுதியான கொள்கை. டாஸ்மாக்கில் மாதம் ரூ.100 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.3,600 கோடிக்கு மாபெரும் ஊழல் நடந்துள்ளது. இந்த தொகை தனிநபர்களின் கணக்கிற்கு சென்றுள்ளது. மதுபான விற்பனையில் மட்டுமின்றி, கொள்முதலிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.

    Advertisement

    கடந்த காலங்களில் டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழல்கள், தவறுகள் ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வரப்படும். அதிகாரிகளிடம் பணம் வசூல் செய்யும் முறை நடைமுறையில் இருக்கிறது.
    ஊழல் செய்த நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்களை முறையாக வேலை செய்ய விடாத சூழல் இருந்தது. கடந்த ஆண்டுகளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 600 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் நிறுவனத்தைத் தனியார்மயாக்கும் கொள்கை இந்த அரசுக்கு இல்லை. டாஸ்மாக் கடைகளில் ஜூன் மாதம் இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியலைத் தாண்டி மதுபானங்கள் விற்கப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். ஊழியர்கள் மதுபானங்களுக்குக் கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மீறி வாங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்," என்றார்.

    English Summary

    Minister Vignesh: Minister Vignesh said, Rs3,000 crore scam happened in Tasmac. We take the list who benefited over that. will release one by one.