ரூ. 35 கோடி பேரம்தான் தவறு! அதிமுகவினர் செய்வது தவறில்லை! பிரவீன் சக்கரவர்த்தி

  • கோவை: தவெக எம்எல்ஏவை முதல்வர் விஜய்க்கு எதிராக செயல்பட ரூ 35 கோடி பேரம் பேசியதாக சொல்லப்படுகிறதே, அதுதான் சட்டவிரோதம், மற்றபடி அதிமுகவினர் தாமாக வந்து தவெகவில் இணைவதில் எந்த தவறும் இல்லை என எம்பி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கோயம்புத்தூர் விமான நிலையத்தில் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

    Advertisement

    அதற்கு அவர் கூறியதாவது: எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது என்பது அதிமுகவும் தவெகவுக்கும் அவங்களுக்குள் நடக்குற விஷயம். நாங்க காங்கிரஸ் கட்சி, அது வந்து அவங்களுடைய உட்கட்சி. ஏதாவது தவறு நடந்துச்சுன்னா அப்ப நாங்க பேசுவோம். இப்ப வெறும் அவங்க போய் சேருறாங்க. அவங்க ரெண்டு பேரு கட்சி, அந்த ரெண்டு கட்சிக்குள்ள இருக்கிற இந்த விஷயம் நாங்க அதை பத்தி பேசுறது சரியா இருக்குமா?

    காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் எந்த அடிப்படையில... எந்த அடிப்படையில இடைத்தேர்தல் நடக்கக்கூடாது?

    Advertisement

    சொந்தமா சுயமா முடிவெடுத்து வேற கட்சிக்கு போறாங்க இல்லையா, அதனால் அதை குதிரை பேரம்னு சொல்லக் கூடாது, குதிரை பேரம் எது என்பதை புரிந்து கொண்டு கேள்வி கேளுங்கள். நேற்று என்ன நடந்துச்சு? யாரை கைது பண்ணி, யார் மேல எஃப்ஐஆர் போட்டுருக்காங்க?

    யாரோ திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவும், அவரு பணம் கொடுத்து ஒரு தவெக எம்எல்ஏவை சபாநாயகர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்கு அளிக்க சொல்லி ஒரு எஃப்ஐஆர் போட்டு இருக்கிறார்களா இல்லையா, அதுதான் குதிரை பேரம், ஹார்ஸ் டிரேடிங் அதுல ஒரு கேஸ் போகுதா இல்லையா? அது வந்து காசு கொடுத்து வாங்குறது, அதுதான் குதிரை பேரம். அதுதான் ஹார்ஸ் ட்ரேடிங் (Horse Trading).

    Advertisement

    இவ்வளவு பணம் கொடுக்கிறோம், அவ்வளவு கொடுக்கிறோம் என சொல்வதுதான் சட்டவிரோதம். தவெக ஆட்சி அமைந்து 50 நாட்கள்தான் ஆகின்றன. இந்த 50 நாட்களில் ஊழல் குறைந்துவிட்டது. நீங்கள் பொதுமக்களை கேட்டுபாருங்கள். லஞ்சம் அப்படின்னு பேச்சு எடுத்தாலே எல்லாம் பயப்படுறாங்க. நம்ம தமிழ்நாட்டுல லஞ்சம் குறைந்தது எவ்வளவு பெரிய புரட்சி, அதுவும் 50 நாள்ல! இதுதான் தவெக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் 50 நாள் சாதனை!

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிச்சிருக்கு, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் இப்போது அது குறைந்துள்ளது.

    Advertisement

    சிங்கப்பெண் படை கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த படையினர் மாநிலம் முழுவதும் செயல்பட கொஞ்சம் நேரம் எடுக்கும். 5 வருஷமாக எத்தனையோ வன்முறைகள், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடந்திருக்கு. அப்போதெல்லாம் விட்டுவிட்டு 50 நாட்களை ஒப்பிட்டு பார்த்தால் எப்படி நியாயம்? இவ்வாறு பிரவீன் தெரிவித்திருந்தார்.

    English Summary

    Rajyasabha MP Praveen Chakravarthi on Horse trading says that Rs 35 crore offer to influnece TVK MLA is illegal.