ஓம் சக்தி பராசக்தி என்று பேசி ஆட்சியை நடத்த முடியாது.. சிறையில் இருந்து வந்த கார்த்திகா ஆவேச பேட்டி

  • கோவை: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வர் விஜயின் பிரசாரப் பாதையில் மறியலில் ஈடுபட்டதாகக் கூறி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோவை சிறையின் முன்பு நாதகவினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

    Advertisement

    தாரபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் விஜயின் பிரசாரப் பாதையில் மறியலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோரை கடந்த 21 ஆம் தேதி போலீஸார் கைது செய்யப்பட்டனர். தவெக தொண்டரை தாக்க முயன்றதாகவும், அவதூறாக வீடியோக்களை பரப்பியதாவும் கூறி நாதக கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் மீது 12க்கும் மேற்பட்ட பிரிவுகள் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    Advertisement

    வாழ்நாள் பெருமை

    இதைத்தொடர்ந்து, அவர்கள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, தங்களுக்தகு ஜாமீன் வழங்கக் கோரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 9 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியில் வந்த கார்த்திகா உள்ளிட்டோருக்கு கோவை சிறை வாசல் முன்பு நாம் தமிழர் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

    பின்னர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் தூத்துக்குடி முத்து வஉசி இருந்த சிறை இது. தமிழர்களை காத்து வரும் சீமான் இருந்த மத்திய சிறை இது. இந்த சிறையில் பொய் குற்றங்களை சுமத்தி எங்களை சிறையில் தள்ளிய தமிழ்நாட்டு தற்குறி முதல்வருக்கு நன்றி. வரலாற்று பெருமை மிக்க சிறையில் இருந்தது எங்களுக்கு வாழ்நாள் பெருமை.

    Advertisement

    இது நியாயமா..

    அக்டோபர் 4 ஆம் தேதி முதல்வர் மட்டுமே பரப்புரை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்கள் செய்யக் கூடாது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்கு கேட்க உரிமை உள்ளது. நான் ஊழல் குற்றவாளி அல்ல. மெத்தபெட்டமைன் கடத்திய ஆளுங்கட்சி நபரா?. எங்கள் வாகனத்தை அமைச்சர் அவருடைய வாகனத்தை மறித்து போட்டு பிரசாரம் செய்கிறார். அது நியாயமா?.

    கோமாளிகளிடம் ஆட்சி

    பண வீக்கம் அதிகம் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு. வேலை வாய்ப்பு இல்லை. ஆட்சி செய்ய தெரியாமல் கையால் ஆகாத தனத்தால் இது போன்ற கைது நடவடிக்கை செய்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் பிரசாரம் செய்தேன். ஓம் சக்தி பரா சக்தி என்று பேசி ஆட்சியை நடத்த முடியாது. கர்நாடகாவில் தண்ணீர் வாங்க முடியாமல் ஆந்திரா செல்கிறார் முதல்வர் விஜய். கோமாளிகளிடம் ஆட்சி இல்லாமல் போராளிகளிடம் ஆட்சி கிடைக்க வேண்டும் என்று கூறினார்.

    English Summary

    Naam Tamilar Katchi candidate Karthika and eight others were released on bail, with party cadres welcoming them outside Coimbatore prison following their arrest over an alleged protest along Chief Minister Vijay’s campaign route.