கோவையில் எடை அதிகமாக ஏற்றி வரும் லாரிகள் மீது புகார் அளிப்போம்.. செங்கல் லாரி உரிமையாளர்கள்

  • கோவை: அரசு நிர்ணயித்த எடையில் மட்டுமே இனி லாரிகளை இயக்க வேண்டும், எடை அதிகமாக ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாங்களே புகார் மனு அளித்து வலியுறுத்துவோம் என்று கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    கோவை மாவட்டத்தில் தடாகம், சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தான் 100க்கணக்கான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தடாகம் பகுதியில் இயங்கும், கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

    Advertisement

    அப்பொழுது சங்க நிர்வாகிகள், பரசுராமன், செந்தில் குமார், தமிழரசன், தினேஷ் குமார் ஆகியோர் கூட்டாக கூறுகையில், "கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக, 4, 5 மற்றும் 6ம் தேதி என மூன்று நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாகவும்,
    இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட லாரிகள், கோவை மாவட்டத்தில் மட்டும் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாகவும், இதனால் ஒரு நாளைக்கு 18 லட்சம் இழப்பு ஏற்படும் என்ற நிலை உள்ளது.

    மேலும் இந்த தொழிலை நம்பி, உள்ள சுமார் 3000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கும் நிலை உள்ளது. இந்த போராட்டம் நடத்த முக்கிய காரணம் அதிக எடையுடன் செங்கல்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு அதிக அளவில் காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். ஆர் டி ஒ அதிகாரிகள் லாரிகளை சிறை பிடிக்கின்றனர். இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    Advertisement

    இதனால் அரசு நிர்ணயித்த எடையின் அளவில் லாரிகளை இயக்க உள்ளனர். ஜிஎஸ்டி பில் இல்லாமல் செங்கல்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இருந்து செங்கல்களை வாங்க மாட்டோம். வேலை நிறுத்த நாட்களில் செங்கல்கள் உற்பத்தியாகிறது. சேலம், பழநி, தாராபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாவட்ட லாரிகள் வருகின்றன. எங்களது போராட்ட நாட்களில், லாரிகள் வந்தால் அதனை சிறைப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர். எங்களது சங்கத்தின் இந்த கோரிக்கையை ஏற்று, பல்வேறு மாவட்ட லாரி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    மேலும், வெளி மாவட்டங்களில் உள்ள சேம்பர் உற்பத்தியாளர்கள், செங்கல் விலையை குறைக்க வேண்டும்.. அதிக விலைக்கு செங்கல்களை விற்பனை செய்வதால் கட்டுமான தொழில் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, சாலை வரி உயர்வு, உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதால், இத்தகைய போராட்டத்தை நடத்த உள்ளோம்" இவ்வாறு கூறினார்கள்.

    English Summary

    The Coimbatore District Brick Lorry Owners' Association has stated that lorries must henceforth be operated only within the weight limits prescribed by the government, and that they themselves will submit formal complaints urging action against lorries carrying excess loads.