அக்டோபர் 16.. கோவை வரும் முதல்வர் விஜய்.. பெரியார் நூலகத்தை திறந்து வைக்க நாள் குறித்த தவெக!

  • கோவை: கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகத்தை முதல்வர் விஜய் அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. ரூ.300 கோடியில்7 ஏக்கர் பரப்பரளவில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகம் திறப்பு விழா தாமதம் செய்யப்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக திமுக கேள்வி எழுப்பி வந்தது. தற்போது விஜய் திறந்து வைக்க இருப்பது அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    Advertisement

    திமுக ஆட்சியின் போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இது மதுரை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நூலகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கின.

    Advertisement

    அதன்படி கோவையில் காந்திரத்தில் பெரியார் அறிவுலகம் ரூ.300 கோடியில் கட்டப்பட்டது. திமுக ஆட்சியின் போதே சுமார் 95% பணிகள் நிறைவடைந்தது. இதன்பின் சட்டசபைத் தேர்தல் வந்ததால், பெரியார் அறிவுலகம் திறக்கப்படவில்லை. கோவை நஞ்சப்பா சாலை பேருந்து நிலையம் அருகே சிறைத்துறைக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் ரூ.300 கோடியில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது.

    2024ஆம் ஆண்டு இதன் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2026ல் நிறைவடைந்தது. 1.98 லட்சம் சதுரடியில் தரைத்தளம் மற்ரும் 7 தளங்கள் கட்டப்பட்டுள்ளது. மொத்த திட்ட மதிப்பில் ரூ.245 கோடி கட்டுமான பணிக்கும். ரூ.50 கோடியில் புத்தங்கள் வாங்குவதற்கும், ரூ.5 கோடி இ-புத்தகங்கள் வாங்கவும் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நூலகத்தில் வளாகத்தில் பெரியார் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல் இந்த பெரியார் நூலம் ஏ மற்றும் பி என்று இரு வளாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 பேர் அமரக்கூடிய வகையில் ஆடிட்டோரியம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியை கண்டுகளிக்கும் வகையில் கோளரங்கம், ஸ்பேஸ் லிப்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    மேல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் 2வது தளத்தில் சொந்த புத்தகம் கொண்டு வருபவர்களுக்கான இடமும், சிறுவர்களுக்கான நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 3வது தளத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம், நிர்வாகப் பிரிவு, நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    4வது தளத்தில் வரலாற்று புத்தகங்கள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு ஆகியவையும், 5வது தளத்தில் ஆங்கில நூல்கள், இன்குபேஷன் சென்டர், 6வது தளத்தில் ஆங்கிலம் கற்கும் பிரிவு, 7வது தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் திறப்பு தாமதமாகி வந்த நிலையில், சட்டசபையில் முன்னாள் அமைச்சர் எவ வேலு கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    இதனால் தவெக தரப்பில் நூலகம் திறப்பு வேகப்படுத்தப்ப்ட்டு, அக்டோபர் 16ல் நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்க சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வரும் முதல்வர் விஜய், நூலகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இந்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

    English Summary

    Periyar Library: CM Vijay to Inaugurate New Periyar Library in Coimbatore’s Gandhipuram on October 16