இந்த டெண்டரை ஏன் தவெக அரசு கேன்சல் செய்யல? விஜய்க்கு தலைவலியை கிளப்பும் புத்தக கொள்முதல் விவகாரம்

  • கோயம்புத்தூர்: கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் போலியானவை என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், இதற்கு முன்னர் திமுக ஆட்சியில் போடப்பட்ட பல டெண்டர்களை கேன்சல் செய்த தவெக அரசு.. ஏன் இந்த டெண்டரை கேன்சல் செய்யவில்லை? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சியில் கோயம்புத்தூரில், பெரியார் அறிவுலகம் கட்ட பயணிகள் தொடங்கப்பட்டன. இது தற்போது தவெக ஆட்சிக்காலத்தில் திறந்து வைக்கப்பட்டது.

    Advertisement

    சர்வதேச தரத்தில் அறிவுலகம் இருப்பதாக பலரும் பாராட்டினர். இப்படி இருக்கையில், 'சிந்தை' தளத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் மிக முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    அறிவுலகத்தில் அடுக்கப்பட்டிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், AI தொழில்நுட்பத்தால் தவறான தகவல்களுடன் எழுதப்பட்டவை. புத்தகங்கள் 'அகல் விளக்கு' எனும் பதிப்பகத்திலிருந்து வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இப்படிப்பட்ட பதிப்பகத்தை இதற்கு முன்னர் யாரும் கேள்விக்கூடபட்டதில்லை என்று குற்றம்சாட்டும் பெருமாள் முருகன், புத்தகங்களில் உள்ள தகவல்கள் போலியானவையாக இருக்கின்றன என்றும், வெறும் 300 பக்கங்கள் கொண்ட புத்தகம், ரூ.1400-1500 என விலை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    பிரச்சனை என்னவெனில், இந்த நூலகம் கட்ட தொடங்கப்பட்டது திமுக ஆட்சியில், நூலகம் திறக்கப்பட்டது தவெக ஆட்சியில்.. அப்படியெனில் எங்கு தவறு நடந்திருக்கிறது? என்பதுதான் கேள்வி.

    திமுகவினர், தவெகவினரையும்.. தவெகவினர், திமுகவினரையும் மாறி மாறி குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், இந்த நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு கடந்த ஆண்டு நவ.5ம் தேதி வந்திருக்கிறது. கொள்முதல் செய்ய வேண்டிய நூல்கள் எவை? என்பது குறித்து முடிவு செய்ய எழுத்தாளர்கள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டது. அதில் எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், அழகிய பெரியவன், ஸ்டாலின் ராஜாங்கம் உள்ளி பலரின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றன.

    Advertisement

    அப்படியெனில் அகல் விளக்கு பதிப்பகத்திலிருந்து புத்தகங்களை வாங்க பரிந்துரைத்தது யார்? அதிகாரிகளா? எழுத்தாளர்களா? சரி அப்படியே பரிந்துரை இருந்தாலும்.. கடந்த கால ஆட்சியில் போடப்பட்ட பல டெண்டர்களை தவெக அரசு ரத்து செய்து வருகிறது. அப்படியெனில், நூலக விஷயத்தில் அரசு அதிகாரிகள் கோட்டைவிட்டுவிட்டார்களா? நூல்களை ஏன் சரிபார்க்கவில்லை? கண்களுக்கு தெரிந்து 1,000-2,000 புத்தகங்கள் போலியானவையாக இருக்கின்றன எனில்.. தெரியாமல் உள்ள புத்தகங்கள் எத்தனை? புத்தக கொள்முதல் மூலம் மக்கள் பணம் எவ்வளவு? யாார் யாருக்கு சென்றிருக்கிறது? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

    இந்த போலி புத்தக விவகாரம் தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. புயலில் சிக்குபவர்கள் யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Periyar Library Spurious Books Row: Amidst allegations that the books procured for the Periyar Arivulaga Noolagam (Periyar Knowledge World Library) in Coimbatore are spurious, many have raised a question: why has the TVK (Tamilaga Vettri Kazhagam) government—which cancelled several tenders issued during the previous DMK regime—not cancelled this particular tender?