பாத்தீங்களா கொடுமையை.. மண்டைக்கேறிய மதுபோதை! நண்பனைக் கொன்ற புள்ளிங்கோ! செஃல்பியால் அதிர்ந்த கோவை!

  • கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனையே இளைஞர்கள் சேர்ந்து கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைவிட கொடுமையாக இறந்து போன நண்பனின் சடலத்துடன் கொலையாளிகள் செல்ஃபி எடுத்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இது போன்ற கொடுமைகள் மது போதையில் தான் நடக்கிறது என்பது வேதனையிலும் வேதனை. ஆனாலும், சில சம்பவங்கள் சாதாரணமாக கடந்து போகக் கூடியது அல்ல..

    Advertisement

    அப்படி ஒரு சம்பவம் தான் கோவையில் நடைபெற்றிருக்கிறது. பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் நண்பனை கொலை செய்ததோடு, கொலையான அந்த இளைஞரின் உடலுடன் செல்பி எடுத்து இருக்கின்றனர் கொடூர மனம் கொண்ட நண்பர்கள்,

    விக்னேஷ் தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும் விஷ்ணு கூலி தொழிலாளியாகவும் இருந்து வந்துள்ளார். இவர்களது வீட்டுக்கு விஷ்ணுவின் நண்பர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஷ்ணுவும் அவரது நண்பரான கிணத்துக்கடவு காமராஜ் நகரை சேர்ந்த அஸ்வின், தினேஷ், மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். பிறகு அருகில் இருந்தவர்கள் அவரை அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும், ஆத்திரம் தீராத தினேஷ் - மாதேஷ் ஆகியோர் அதிகாலை 1.45 மணிக்கு மீண்டும் விக்னேஷ் வீட்டுக்கு வந்துள்ளனர்.

    அப்போது தூங்கிக் கொண்டிருந்த அஸ்வினை சுத்தியலால் தலையில் அடித்ததோடு, கத்தியால் கழுத்தை அறுத்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் கொலையான அஸ்வின் உடலுடன், வாயில் கத்தியை வைத்தபடி செல்ஃபி எடுத்துள்ளனர்.

    இதற்கிடையே கொலை குறித்து தகவல் அறிந்து சென்ற கிணத்துக்கடவு போலீசார் அஸ்வினின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அஸ்வினை கொலை செய்து விட்டு இருவரும் செல்ஃபி எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    A youth was allegedly murdered by friends after a drunken quarrel near Pollachi, with the accused reportedly taking selfies beside the body.