இந்தியாவின் ‘எடிசன்’ ஜி.டி. நாயுடுவாக மாறும் மாதவன்... G.D.N. மீது எகிறும் எதிர்பார்ப்பு

  • சென்னை: சினிமாவில் பொதுவாக பல்வேறு வகையான நடிகர்கள் உண்டு. சில நடிகர்கள் வணிக ரீதியிலான பொழுதுபோக்கு திரைப்படங்களைத் தேர்வு செய்கிறார்கள். இன்னும் சிலர், காலம் கடந்தும் நினைவில் நிற்கும் கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவராகவே நடிகர் ஆர். மாதவன் கடந்த சில ஆண்டுகளாக இருக்கிறார்.

    Advertisement

    'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய ஆளுமையின் கதையை திரையில் கொண்டு வருகிறார் மாதவன். இந்த முறை அவர், கண்டுபிடிப்பாளர், தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை முன்னோடியான ஜி.டி. நாயுடுவாக நடிக்கிறார். நாயுடு மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் அவரது சாதனைகள் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வருகின்றன.

    Advertisement

    ஜிடி நாயுடு

    நம்பி நாராயணனின் அசாதாரண வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்த 'ராக்கெட்ரி' திரைப்படத்திற்குப் பிறகு, 'G.D.N.' திரைப்படம் இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்த மற்றொரு தொலைநோக்குப் பார்வை கொண்ட நபரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. அர்த்தமுள்ள கதைகளை மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் மாதவன் இந்த படத்தில் நடிக்கிறார். அதேசமயம் இதில் அவர் மற்றொரு வரலாற்று சாதனையாளருக்கு திரையில் உயிர் கொடுக்கிறார்..

    எந்தவொரு கேரக்டரில் நடித்தாலும் தன்னை அப்படியே அந்த கதாபாத்திரமாக மாற்றிக் கொள்வதில் பெயர் பெற்றவர் மாதவன்.. இந்த G.D.N.படத்திற்காக ஜி.டி. நாயுடுவின் தோற்றம், பழக்கவழக்கங்களை துல்லியமாக வெளிப்படுத்தியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    படக்குழு

    'G.D.N.' என்பது வெறும் கண்டுபிடிப்புகளை பற்றிய திரைப்படம் அல்ல என்று படக்குழு தெரிவித்திருந்தது. மாறாக ஆர்வம், விடாமுயற்சி மற்றும் வித்தியாசமாக கனவு காணும் துணிச்சல் ஆகியவற்றை கொண்டாடும் படைப்பாக இது உருவாகி வருகிறது. இவை அனைத்தும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மாற்றி அமைத்த முக்கிய குணாதிசயங்களாகும்.

    கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கும் இந்தப் படத்தை டிரைகலர் ஃபிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றன. மேலும் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    நடிகர் மாதவன்

    நடிகர் மாதவனுக்கு இந்த 'G.D.N.' படம் என்பது இந்திய வரலாற்றில் முக்கியமான தவிர்க்க முடியாத ஒரு கதையை இன்றைய தலைமுறைக்கு எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்லும் மற்றொரு வாய்ப்பாகும். இந்தியாவின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ஜி.டி. நாயுடுவின் கதாபாத்திரத்திற்கு அவர் எப்படி உயிர் கொடுத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

    Advertisement

    உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுத் திரைப்படங்களுக்கு சமீப காலமாக நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 'G.D.N.' திரைப்படமும் சரியான நேரத்தில் வெளியாகவுள்ளது. விமர்சன ரீதியிலும், வணிக ரீதியிலும் வெற்றி பெறும் திறன் கொண்ட படமாக இது பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜிடிஎன் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    English Summary

    After the success of Rocketry: The Nambi Effect, R. Madhavan is set to portray legendary inventor G.D. Naidu(ஜிடி நாயுடு படம் ரிலீஸ்): All things to know about G.D.N movie.