Robot: கோவை பெரியார் அறிவுலக மையத்தில் விஜய்யை வரவேற்ற ரோபோ! சைகையில் பதிலளித்த முதல்வர்

  • கோவை: கோவையில் பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவுக்கு வருகை தந்த முதல்வர் விஜய்யை ரோபோ ஒன்று வரவேற்றது. விஜய்க்கு ஹாய் என கையை காட்டியது, அவரும் ஹாய் சொன்னார், மேலும் அங்கிருந்தவர்களுக்கு இரு கைகளையம் கூப்பி வணக்கம் தெரிவித்தது. எல்லோரும் வணக்கம் தெரிவத்தனர்.

    Advertisement

    கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் டவுன் பஸ் நிலையம் அருகே உள்ள சிறைத் துறைக்கு சொந்தமான இடத்தில் 7 ஏக்கர் பரப்பில் ரூ 300 கோடியில் பெரியார் அறிவுலகம் எனப்படும் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த கட்டுமான பணிகள் திமுக ஆட்சியில் 2024 இல் தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நூலகத்தின் தரைதளம் 1.98 லட்சம் சதுரடியில் உள்ளது. மொத்தம் 7 தளங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ 245 கோடியாகும். புத்தகங்களுக்கு ரூ 50 கோடியும், இ புத்தகங்களுக்கு ரூ 5 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது.

    மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த நூலக வளாகத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெரியார் நூலக வளாகம் ஏ மற்றும் பி என இரு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகமும், 350 பேர் அமரக் கூடிய ஆடிட்டோரியமும், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியை கண்டுகளிக்கும் வகையில் கோளரங்கம், ஸ்பேஸ் லிப்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது.

    Advertisement

    2ஆவது தளத்தில் சொந்தமாக புத்தகம் எடுத்து வருபவர்கள் படிக்க குறிப்பிட்ட இடமும், சிறுவர்களுக்கான நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 3ஆவது தளத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம், நிர்வாகப் பிரிவு, நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    கோவை ஜோதிடர் திருப்பூர் பெண்ணிடமும் காட்டிய வேலை.. சென்னை லாட்ஜில் நடந்தது என்ன? அடுத்த புகார்

    4ஆவது தளத்தில் வரலாற்றுப் புத்தகங்கள், தமிழ் நூல்களும், 5ஆவது தளத்தில் ஆங்கில நூல்களும், 6ஆவது தளத்தில் ஆங்கிலம் கற்கும் பிரிவும், 7ஆவது தளத்தில் அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நூலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். அனைத்து தளங்களுக்கும் சென்று விஜய் பார்வையிட்டார். அப்போது அறிவியல் மையத்தில் ஒவ்வொரு அறிவியல் தொடர்பான கருவிகளையும் மாணவ, மாணவிகள் விஜய்க்கு விளக்கினர். சில அறிவியல் விளையாட்டுகளை விஜய்யும் விளையாடினார்.

    Advertisement

    இந்த நிலையில் அவரை ஒரு ரோபோ வரவேற்றது. அது விஜய்க்கு ஹாய் என கை காட்டியது. விஜய்யும் கை காட்டினார். அது போல் கைகளை கூப்பி வணக்கம் சொன்னது, விஜய்யும் வணக்கம் சொன்னார்.

    English Summary

    Robot welcomes CM Joseph Vijay at Periyar Arivulagam, Gandhipuram, Coimbatore. It says Hi to him, he also responded.