சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை

  • கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கோவையின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. இந்நிலையில் சாய்பாபா காலனியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் குறித்தும், சிங்காநல்லூரில் அமையவுள்ள மேம்பாலம் குறித்தும் கோவை அமைச்சர் சம்பத்குமார் முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    கோவை சாய்பாபா காலனி பகுதியில் கங்கா மருத்துவமனை அருகே தொடங்கி எருகம்பெனி வரை 1.2 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2024 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ரூ.72 கோடி மதிப்பில் 4 வழி மேம்பாலமாக கட்டப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதமே பணிகள் நிறைவடைந்து மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். பல்வேறு பணி பல்வேறு காரணங்களால் மேம்பாலம் கட்டுமான பணி தாமதமாகி வருகிறது.

    Advertisement

    சாய்பாபா காலனி மேம்பாலம்

    தற்போது மேம்பாலம் இறுதிகட்ட பணியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சாய்பாபா கோவில் பேருந்து நிலையம் அருகே ரேம்ப் அமைக்கப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்ய நெடுஞ்சாலைத்துறை திட்டமிடப்பட்டது. பணிகள் மந்தமாக நடைபெறுவதால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. தினமும் காலை மற்றும் மாலை பீக் ஹவர்ஸ்களில் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மேம்பால பணி திட்டமிட்ட கால அவகாசத்தை கடந்து சென்றுள்ளது. இறுதிகட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும். சாலை குறுகலாக இருப்பதால் அந்தப் பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகம். வாகனம் மெதுவாக நகரும்போது நாய்கள் கடிக்கின்றன. ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. மேம்பால பணிகளை அதிகாரிகள் முறையாக கண்காணிக்கிறார்களா. தாமதப்படுத்தும் ஒப்பந்த நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நடவடிக்கை வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Advertisement

    இந்த மாத இறுதிக்குள் பயன்பாடு

    இந்நிலையில் சாய்பாபாகாலனி மேம்பால பணியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார் ஆய்வு செய்தார். கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சென்று அவர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது சம்பத்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
    "சாய்பாபா காலனி மேம்பால பணி 88 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் மேம்பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் பணிகளை செய்வோம். மழை நீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்பாலத்தில் அமைக்கப்படும். வெள்ளலூர் குப்பை கிடங்கு குறித்து ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளோம். குப்பை கிடங்கு உள்ள பகுதியை பசுமையான பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளலூர் பேருந்து நிலையம் அமையும் பகுதியை ஒட்டியுள்ள சாலைகள் குறுகலாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. சாலைகளை விரிவாக்கம் செய்து பேருந்து நிலையம் கொண்டு வரப்படும்.

    Advertisement

    சிங்காநல்லூர் மேம்பாலம்

    சிங்காநல்லூர் மேம்பாலம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கும். சிங்காநல்லூர் சந்திப்பில் புனித ஜோசப் பள்ளி அருகே தொடங்கி, உழவர் சந்தை வரை 2.4 கி.மீ தொலைவுக்கு ரூ.170 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும்" என்றார்.

    English Summary

    Minister Sampathkumar said, Saibabacolony flyover will come to public use this month end. Singanallur Flyover work to start soon.