நயினாருக்கு எதிராக செக்.. சூடுபிடிக்கும் மருத்துவ கல்லூரி பிரச்சனை.. ஆதாரம் திரட்டிய செங்கோட்டையன்

  • கோவை: தவெக ஆட்சியை பிடித்து இரண்டு மாதங்கள் ஆகப்போகிறது. ஏராளமான சர்ச்சைகளும் வட்டமடிக்கின்றன. அமைச்சர்கள் பலர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன், நயினார் நாகேந்திரன் இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது. நயினார் மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளதாக செங்கோட்டையன் கூறினார். இதை நிரூபிக்க சொல்லி நயினார் சவால் விடுத்தார். இந்நிலையில் விரைவில் ஆதாரங்களை வெளியிடவுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மேகதாது விவாகரத்தில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்கிறார்கள். பாஜக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது காவிரி பிரச்சனையை இருந்தபோது பேசி தீர்த்திருக்க வேண்டும். எல்லோரும் நேரடியாக பேச வேண்டும், சட்டரீதியாக பேச வேண்டும் என இரண்டு விதமாக கருத்து சொல்கிறார்கள். எது சரியாக இருக்கும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார்.

    Advertisement

    சினிமா பாணியா

    தமிழகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழகத்தை சேர்ந்தவரை ஏன் மத்திய பிரதேசத்தில் போட்டு இருக்கின்றீர்கள் என யாரும் கேட்கவில்லை. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மதம், மொழி ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு மாநிலத்திற்கு மாநிலம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது நோக்கம். நாம் எடுத்துக் கொள்ளும் மனநிலையை பொறுத்திருக்கிறது. திரைப்படம் தயாரிப்பாளரும் நாட்டின் ஒரு குடிமகன் தானே.

    முதலமைச்சர் என்ன நினைக்கிறாரோ அந்தக் கருத்தைத்தான் டெல்லி பிரதிநிதி வெளியிட முடியும். ஒருவரை தேர்வு செய்த உடனே அவருக்கு தகுதி இல்லை என சொல்லிவிட முடியாது. அரசியலில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தகுதி என்று கிடையாது. சமூக பணிகளில் இருப்பவர்களும் செய்யலாம். வானதி சீனிவாசன் சொல்வதற்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. கருத்து சொல்வது வேறு. எதை வேண்டுமானாலும் கொச்சைப்படுத்துவது வேறு. சினிமா பாணியல் என்ன இருக்கிறது.

    Advertisement

    கோவை விமான நிலையம் விரிவாக்கம்

    சட்டமன்றத்தில் மற்றவர்கள் செய்யாததையா முதலமைச்சர் செய்தார். திமுகவினர் சபாநாயகரை கீழே தள்ளிவிட்டு மேலே அமர்ந்தார்கள். உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்குள் இருந்து பேசியிருக்க வேண்டும். முதலமைச்சர் பேச வேண்டும் என்று கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தார்கள். முதலமைச்சர் பேசும்போது எதற்கு ஓடினார்கள். பேசுங்க என சொன்னது தவறாகிவிட்டது என இப்போது நினைக்கின்றனர். இறுதி வரை இருந்து பேசுங்கள் என சபாநாயகர் சொன்னார். அரசு நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது முதலமைச்சரின் ஆசை.

    வானதி சீனிவாசனை ஏன் மக்கள் மன்றத்தில் நிராகரித்தார்கள். அவர் மக்கள் மன்றத்தில் நன்கு அறிமுகமானவர் தானே. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்பார்கள். வருவாய்த்துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டது கிடையாது. மின்வெட்டு காரணமாக மின்துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டனர். வருவாய்த்துறை நல்ல முறையில் செயல்பட்டுகிறது. கோவை விமான நிலையத்திற்கு மேலும் 10 ஏக்கர் எடுக்க வேண்டியுள்ளது.

    Advertisement

    நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி

    மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்ததை காட்டவில்லையெனில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா என்று நயினார் நாகேந்திரன் கேட்டுள்ளார். நயினார் விண்ணப்பம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அடுத்த செய்தியாளர் சந்திப்பில் ஆதாரத்தை நேரிலேயே காட்டி விடுகிறேன். ஒரு இயக்கத்தை நல்ல நடைமுறைகளை பின்பற்றி வரவேற்க வேண்டும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது கம்பம் ராமகிருஷ்ணன் மதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்.

    பிறகு அவர்களுக்கு தேர்தலில் சீட் வழங்கப்பட்டது. ஒரு கட்சி நல்ல முறையில் இயங்கும்போது, யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அதை பயன்படுத்தி தற்போது ராஜினாமா செய்கின்றனர். எங்களுக்கு 120க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. குதிரை பேரம் என்பது வார்த்தை ஜாலம் தான். 6 மாதங்களுக்கு முன்பு முன்பு நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெக வந்தேன். இப்போது அமைச்சராக இருக்கிறேன்" என்றார்.

    English Summary

    Minister Sengottaiyan said, BJP Nainar Nagendran applied for Medical college. I will release the evidence soon in next press meet.